பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


மாறு எழுந்தது. அந்தப் புகையில் ஈரம் புலர்த்திக் கொண்டு தம் கொங்கை முகட்டில் மெழுகப்பட்ட கலவைக் குழம்பு மடை திறந்தாற்போல் நான்கு திக்குகளிலும் கமழ்ந்தது. முகிலின் வயிற்றினின்றும் புறப்பட்டுத் தோன்றும் திங்களைப் போன்று, உறையினின்று எடுக்கப்பட்டுத் திகழும் வெள்ளிக் கிண்ணத்திலே வெப்பம் மிக்க மதுவை வார்த்தனர். பாம்பி னால் விழுங்கப்பட்ட முழுத் திங்கள் தோன்றும்படி அந்தக் கிண்ணத்தைத் தம் அழகிய கையில் எடுத்தனர். திங்களின் ஒளியைப் பருகும் தேவ மகளிரைப் போன்று அக் கிண்ணத் தைச் செவ்வாம்பல் போன்ற வாயில் வைத்து அருந்தினர்.

சில மகளிர் தம் உடலின் மேற்புறத்தில் வெண்மையான மெல்லிய ஆடையைப் கவித்தனர். சில மகளிர் பூத் தொழில் பொருந்திய வெண்மையான ஆடையைத் தம் கூந்தலின் மேல் போர்த்தினர். சில மகளிர் அதை முறுக்கினர். சிலர் சிவந்த குங்குமக் குழம்பையும் சேறாக்கப்பட்ட அகில் குழம்பையும் பல கருப்பூரங்களையும் சாந்து அம்மியில் இட்டு அவை ஒன்றாய் ஆகும்படி குழவியால் வேள்விக் குண்டத்தில் எழும் தீயினது நிறம் உண்டாகும்படி அரைத்தனர். மற்றும் சிலர் அந்தப் புதிய நீரில் தாம் கொண்டுவந்த பொன்னால் செய்யப் பட்ட நத்தை, நண்டு, காலையுடைய இறா, வன்மையுடைய வாளைமீன் ஆகியவற்றை இட்டு நாடு விளைவதாகுக, உலகம் பொலிவதாகுக என்று வாழ்த்தினர்.

வேறு சிலர் இரப்பவரின் வறுமையை அவரது மெய்ப் பாட்டால் உணர்ந்து அவர் ஈயுங்கள் என்று தம்மை இரந்து கூறுவதற்கு முன்னமேயே, அறம் கருதி, அவர் வேண்டு வனவற்றை அளித்தனர். மற்றும் சிலர் தூய்மை செய்யப் பெற்ற நீலமணி போன்ற நிறம் வாய்ந்த வளைந்து தம் கூந்தல் மீது மொய்த்துள்ள வண்டுகள் ஆரவாரம் செய்ய, அக் கூந்தல் மீது பத்து வகைத் துவர்களையும் தேய்த்துக் கொண்டு நீரில் முழுகினர். வேறு சில மகளிர் தம் தலையில் எண்ணெயை இட்டு அந்த எண்ணெய் நீங்கும்படி நுண்ணிய அரைப்புத் துளை இட்டுப் பிசைந்தனர். மற்றும் சிலர் மலர் மாலைகளையும் அணிகலன்களையும் அந்த வையை நீரில் இட்டனர். வேறு சில மகளிர் அந்நீர் உண்ண இயலாத