276
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
திங்கள் தோன்றி மாலைக் காலத்தில் ஏற்பட்டிருந்த இருளைப் போக்கியது மதுரையில் தங்கும் இயல்பை எண்ணி, எல்லாரும் அவ் இடத்தினின்று திரும்பிச் செல்லும், செயலால் புதிய இயல்பு வாய்ந்த அத் திருநாள் கருதி அணிந்த ஆடை அணிகளை அகற்றினர். அந்த மாலைக் காலத்தில் மலர்ந்த முல்லை முதலிய மலர்களை அணிந்தனர். தோளில் அணியும் கொடியும், தோடும், ஒளி மிக்க அணியாக முத்து வடமும் ஆகிய இத்தகைய அணிகலன்களையும் அணிந்து கொண்டனர். அவர்களுள் பாடும் இயல்புடையார் பாடும் பாடலும், ஆடும் இயல்புடையார் ஆடும் ஆடலும், அந்த ஆடலுக்கு உரிய சீருடன் கூடிய தாளமும் மகளிர் கூந்தலில் ஆரவாரம் செய்கின்ற நறுமணம் கமழ்கின்ற தேனைச் செய்யும் வண்டுகள் வழங்கும் வழக்கம் என்னும் இசையால் எழுந்த ஒசையுடன் பாடும் பண் ஒலியைக் கேட்டுத் தம் இனம் என எண்ணி ஊரினின்று வண்டுகள் வந்தன. அவை பாடுபவர் வருந்துமாறு அவர் எதிரே நெருங்கிப்பாடின. மகளிர் கூந்தலில் அவர் எதிரே மொய்த்துப் பாடின. மகளிர் கூந்தலில் முன்னம் மலர்ந்த மலர்த் தேனை உண்டு வண்டுகளும் மேற் கூறப்பட்ட வண்டுடன் கூடி இனிய குரலுடன் ஆரவாரித்தன. இப்படி எல்லாரும் தென் திசையை நோக்கி மீண்டனர். அப் போது மதுரையில் உள்ள அழகிய மேனிலை மாடங்களின் உள்ளே இருந்து மங்கையர் தூவிய பனிநீர் மணத்துடன் கலந்து தென்றற் காற்று மணமுடையதாய் மாறுதற்கு அம் மங்கையர் அம் மாடத்தில் அகில் முதலிய வற்றைத் தீயிலிட்டு எழுப்பும் நறுமணப் புகை செறிந்த மலையில் உள்ள பூங் கொடிகளில் பொருந்திப் பின்பு காற்றுடன் கூடி வானில் ஏறிச் செல்லும் பனியாகிய ஆவியைப் போன்றதாய் விளங்கிற்று.
உயிர்கள் பசியாலும் நோயாலும் வருந்தாமல் வாழும் பொருட்டுத் தானே பெருகி வரும் வையைப் புதுநீர்க்கு இவ் வண்ணம் விருந்து செய்யும் இயல்புடையது மதுரை. அதில் குற்றம் இல்லாத இசைக்கின்ற இசைப்பாடலுக்கு உரிமை யுடைய பாணரும் கூத்தரும் தம்மை விரும்பும் கூட்டத்துடன் ஒருங்கே இன்று போல் என்றென்றும் ஏத்தி வணங்கும்படி