பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

அரி மலர் மீப் போர்வை ஆழம் தாழ் மார்பின் திரை நுரை மென் பொகுட்டுத் தேம் மனச்சாந்தின் அரிவையது தானை என்கோ கள் உண்ணுஉப் பருகு படி மிடறு என்கோ பெரிய திருமருத நீர்ப் பூந் துறை. ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல் நாளின் நாளின் நளி வரைச் சிலம்பு தொட்டு நிலவுப் பரந்தாங்கு நீர் நிலம் பரப்பி உலகு பயம் பகர ஒம்பு பெரும் பக்கம் வழியது பக்கத்து அமரர் உண்டி மதி நிறைவு அழிவதின் வரவு சுருங்க எண் மதி நிறை உவா இருள் மதி போல நாள் கறைபடுதல் காணுநர் யாரே சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை வயத் தணிந்து ஏகு நின் யாணர் இறு நாள் பெற; மா மயில் அன்னார் மறையில் புணர் மைந்தர் காமம் கள விட்டு கைகொள் கற்பு உற்றென மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல் இல்லத்து நீ தனிச் சேரல் இளிவரல்

என ஆங்கு கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளைக் காளை படையொடும் கொண்டு பெயர்வானைச் சுற்றம் இடை நெறித் தாக்குற்றது ஏய்ப்ப அடல் மதுரை ஆடற்கு நீர் அமைந்தது யாறு. ஆற்று அணி வெள் வாள் விதிர்ப்போர் மிளிர் குந்தம் ஏந்துவோர் கொள்வார் கோல் கொள்ளக் கொடித் திண் தேர் ஏறுவோர் புள் ஏர் புரவி பொலம் படைக் கைம்மாவை வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு ஊர்பு உழக்குநரும் கண் ஆரும் சாயற் கழித் துரப்போரை வண்ண நீர் கரந்த வட்டு வட்டு எறிவோரும் மணம் வரு மாலையின் வட்டிப்போரைத் துணி பினர் மருப்பின் நிர் எக்குவோரும்