தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
27
அதுவே ஐய, நின் மார்பே,
அறிந்தனை ஒழுகுமதி, அறனுமார் அதுவே. - ஐங் 44
தோழி, “ஐயனே! இனிமையான நீர் மிக்க பொய்கையில் வாழும் ஆமையின் இளைய பார்ப்புகள். தம்முடைய தாய் தம்மை ஒம்பாவிடினும் தாம் அதன் முகம் நோக்கி வளரும். அதுபோன்று இவள் நீநல்காது போனாலும் நின்மார்பையே நோக்கி வாழும் இயல்புடையவள் ஆவாள். நின் மார்பு அத் தன்மையுடையது. ஆதலால், நீ அதனை அறிந்து ஒழுகுக. அஃது நினக்கு அறமும் ஆகும்” எனப் புறம்போந்து வந்தத் தலைவனைப் பார்த்துக் கூறினாள்.
45. இவள் கண்கள் நிறம் மாறின. கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து, வேனில் ஆயின் மணி நிறங் கொள்ளும் யாறு அணிந்தன்று, நின் ஊரே, பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே. - ஐங் 45 “மகிழ்நனே, கூதிர் காலத்தில் நீர் மிகுதலால் குளிர்ந்த தாய்க் கலங்கி வேனிற் காலத்தில் அந் நீர் இல்லாததால் தெளிந்து நீலமணியின் நிறத்தைப் பெறும் ஆறு. அவ் ஆற்றினால் நின் ஊர் அழகு பெற்றது. அதன் இயல்புதானும்
இன்றி இவள் கண்கள் எந்நாளும் நிறத்தினால் அழகு பெற்றன” என்று தோழி கூறினாள், தலைவனிடம்.
46. அங்கிருத்தலே நன்று
நினக்கே அன்று அஃது எமக்குமார் இனிதே - நின் மார்பு நயந்த நல் நுதல் அரிவை வேண்டிய குறிப்பினை ஆகி, ஈண்டு நீ அருளாது, ஆண்டு உறைதல்லே. - ஐங் 46 தோழி, “பெரும! நின் மார்பை விரும்பிய நல்ல நெற்றியை யுடைய பரத்தையானவள் விரும்பிச் செய்த குறிப்புடனே, இங்கு வருவதை விட்டு, வாராது அவளது மனையிலேயே தங்குதல் நினக்கே அன்றி எமக்கும் நல்ல தாகும்” என்று தலைவனிடம் வருத்தமுடன் சொன்னாள்.