பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

279


தெரி கோதை நல்லார் தம் கேளிர்த் திளைக்கும் உருகெழு தோற்றம் உரைக்குங்கால் நாளும் பொரு களம் போலும் தகைத்தே பரி கவரும் பாய் தேரான் வையை அகம். நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண் தார் வரை அகலத்து அவ் ஏர் அணி நேர் இழை ஒளி திகழ்தகை வகை செறி பொறி புனை வினைப் பொலங் கோதையவரோடு பாகர் இறை வழை மது நுகர்பு களி பரந்து நாகரிந் நல் வள வினை வயவு ஏற நளி புணர்மார் காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்புற சீர் அமை பாடற் பயத்தால் கிளர் செவி தெவி உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் அம்பி கரவா வழக்கிற்றே, ஆங்கு அதை கார் ஒவ்வா வேனில் கலங்கித் தெளிவரல் நீர் ஒவ்வா வையை நினக்கு. கனைக்கும் அதிர்குரல் கார் வானம் நீங்க பனிப் படு பைதல் விதலைப் பருவத்து ஞாயிறு காயா நளி மாளிப் பின் குளத்து மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப் வெம்பாதாக வியல் நில வரைப்பு என அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர் முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட பனிப் புலர் ஆடிப் பரு மணல் அருவியின் ஊதை ஊர்தர உறை சிறை வேதியர் நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின் தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர வையை நினக்கு மடை வாய்த்தன்று மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் அவர் தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ