282
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
ஒரையின் பின் உள்ள மகர ஒரையில் நிற்க, இராகு, மதி மறையும் வருகின்ற நாளில் அகத்தியன் என்ற மீன் தன் இடத்தைக் கடந்த மிதுன ஒரையைச் சேர, முதுவேனில் பருவத்துக்குப் பின் வருகின்ற கார்காலத்தில் மழை பொழியும் என்று நூலில் கூறப்பட்டுள்ள இந்த விதியால் உயர்ந்த சையமலை மீது பெய்த மழை மிகுதிப்பட்டது. பட வையை யாற்றில் நீர் பெருகி வந்து கரைகளை நெரித்தது.
மலையில் வளர்ந்துள்ள புன்னை மரமும் ஆற்றின் கரையில் உள்ள சுரபுன்னை மரமும், வண்டுகள் இசை பாடு கின்ற சண்பக மரக் கூட்டமும், குளிர்ந்த தன்மையுடைய தேற்றா மரமும், வாள் வீர மரமும், கொம்புகள் தழைத்து வளரும் வேங்கை மரமும், செவ்வலரி, காந்தளும், தீயைப் போன்று, மலரும் தழைத்த தோன்றியும், காற்றால் மலர்த்தப் பட்ட இதழ்களையுடைய நீலமும் ஆகியவற்றின் மலர்களை மலர்வித்தன.
முன் கூறப்பட்ட மரங்களை மூங்கில் வளரும் மலைச் சாரலின் சோலையில் அருவிநீர் கொண்டு வந்து குவித்தது. அவற்றைப் பாய்கின்ற வையை ஆற்று நீர் தள்ளிக் கொண்டு வந்து அகன்ற திருமருதத்துறை என்னும் நீராடுதற்கு உரிய அழகிய துறையில் தந்தது. அங்ஙனம் தருதலால் அந்த மருதத் துறையை ஆராய்ந்து மலர் பறித்தற்குரிய சோலை யுடைய வலிய குடிகள் தாங்கள் பறித்த நிறம் உடைய மலர்களைக் கொணர்ந்து குவித்து வைக்கும் மண்டபமாகும் எனச் சொல்வேனோ! ‘மலராகிய போர்வையும் மலையில் உள்ள முத்துகள் பொருந்திய மார்பையும் அலையையும் நுரையையும் மென்மையான குமிழிகளையும் நல்ல நறுமணம் உடைய சந்தனச் சாந்தினையும் உடைய வையை என்ற மங்கையின் ஆடையினது முன்தானை எனக் கூறுவேனோ? ‘கள்ளை வாயில் கொண்டு பருகும் நில மகளின் மிடறு என்று சொல்வேனோ? இந்த உவமைகளுள் எதனை எடுத்துத் தேர்ந்து எடுத்துச் சொல்வேன்?
பிறை தோன்றிய நாள் தொடங்கி வளர்கின்ற வளர் பக்கம் போல், நாளுக்கு நாள் பெருகி அதன் ஒளி எங்கும் பரந்ததைப் போன்று, மலைச் சாரல் தொடங்கி நிலம்