284
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
கையில் கோலைக் கொண்டு நின்றனர். கொடியை உடைய திண்ணிய தேரில் ஏறியிருந்தனர் சிலர். பறவை பறப்பதைப் போல் விரைந்து போகும் இயல்புடைய குதிரைகளையும், பொன்னால் ஆன பட்டத்தை உடைய பறவைகளையும் ஏறி அவற்றை வையை நீந்துதற்குரிய வெள்ள நீரில் செலுத்திச் செலுத்திச் கலக்கினர். சிலர், கண்ணுக்கு நிறைந்த அழகை யுடைய மூங்கில் குழாயில் நீரை எடுத்துத் தம்மீது செலுத்துப வர்களை அரக்கு நீரை வட்டால் எறிந்தனர் சிலர். தம்மை நல்ல மணம் உடைய மலர் மாலையால் சுழற்றிப் புடைப்ப, அறுக்கப்பட்ட சருச்சரையை உடைய கொம்பில் அடக்கப் பட்ட மண நீரைச் சிலர் வீசினர். ஆராய்ந்து தொடுக்கப் பட்ட மாலையை யுடைய மகளிர் தம் காதலருடன் நாள் தோறும் ஆடி மகிழ்ந்தனர். அழகுடைய தோற்றத்தை உவமை காட்டிக் கூறும்போது பகைவரின் குதிரைகளை வென்று கவர்ந்து கொள்ளும் விரைந்து ஒடும் தேரையுடைய பாண்டிய மன்னரின் வையை ஆற்றின் உள் இடம் போர்க்களம் போன்ற தன்மையுடையது.
நீராடுவதற்கு ஏற்ற அணிகலன்களுடன் மலர்களால் கட்டப்பட்ட மாலையைச் சூடிய மலையைப் போன்ற மார்பிடத்தே அந்த அழகிய ஒப்பனையையும், அதற்கு ஏற்ற பிற அணிகலன்களையும் ஒளி விளங்கக் கட்டப்பட்டு அமைந்த பொன்னரி மாலை சூடிய மகளிருடன் பாகு தங்கிய இளங்கள்ளைப் பருகிப் களிப்பு மிக விளங்கினர். நல்ல செல்வத்தை உடைய அறவினையைச் செய்த நாகர்களைப் போன்று விருப்பம் மிக இமைவிடாது புணர்தற்கு, தாளம் பொருந்திய கிளர்ச்சியை உடைய செவியை நிறைத்துக் கொண்டு, ஆடவரும் மகளிரும் அழகு என்ற கள்ளைக் கண்ணால் பருகியபடி விளங்கினர். வானத்தில் வாழும் தேவரின் ஒளி மிக்க வைமாணிகர் ஊர்ந்து செல்லும் விமானத்தைத் தெளிவாக வையை நீர் காட்டியது.
வையையே, கார் காலத்தில் கலங்கி வேனிற் காலத்தில் தெளிவதால் உனக்கு இத் தன்மை எப்போதும் ஒத்திருப்ப தில்லை. கார்கால முகில்கள் முழங்கும் திசைகள் அதிர்வ தற்குக் காரணமான இடி ஒலி நீங்கிப் பணி மிகும். அதனால்