பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

285


குளிர் நடுங்கும் முன்பணிப் பருவத்தில் ஞாயிறு சுடாத இறுதி மழையை உடையது மார்கழி மாதம். அம் மாதத்தில், மிகப் பெரிய திங்கள் மண்டிலம் வளர்ந்து நிறைந்த திருவாதிரை நாளில் விரிந்த மெய்ந்நூல்களை உடைய அறவோர் திருவா திரைக்குத் தெய்வமான சிவபெருமானுக்குத் திருவிழாவைத் தொடங்குவர். தொடங்க, முப்புரிப் பூணுரலை உடைய பார்ப்பனர் அந்த விழாவில் இறைவனுக்குப் பலிப் பொருள் இட்ட பொன் கலங்களையும் பிறவற்றையும் ஏந்து கின்றனர்.

அகன்ற இந்த உலகம் கதிரவனின் காய்லால் வெப்ப முடைத்தாகாமல் மழையால் குளிர்வதாகுக என வாழ்த்தி அம்பா ஆடல் ஆடும் கன்னி மங்கையர், சடங்கினை முதிய பார்ப்பனியர் நோன்பு செய்யும் முறையை அறிவிக்க, பனியை உடைய விடியற் காலையில் நீரில் ஆடி, பருத்த மணலில் ஒடும் நீரில் குளிர் வாடை தவழ்ந்து வருதலால் நின் நீர் உராய்ந்து சென்ற கரையில் வாழ்கின்ற அந்தணரின் வேத நெறிப்படிவளர்க்கப்பட்ட வளைவாய் எரியும் தீயை வளர்த்துச் சிறப்புடன், ஒப்பனையுடைய அக் கன்னியர் போய், அத் தீயில் தம் ஈர ஆடையை உலர்த்துவர். வையையே, அத் தீயில் கொடுக்கும் அவி நினக்குப் பொருத்தமானதே!

மையோலை பிடித்த இளம் புலவரது விளையாட்டுக்கு மாறாய்க் காமக் குறிப்புணர்வு இல்லாது விளையாடும் ஆயத்தையுடைய அக் கன்னியர், அவரவர் அன்னையர் பக்கத் தில் நின்று நோன்புடைய இத் தைந்நீராடலை உன்னிடத்தே பெற்றது. இவ்வாறு நீரில் நின்றன்றி எரியும் தீயின் பக்கத்தில் நின்ற பொறி புலன்களை அடக்கிச் செய்தற்கான தவத்தை முன் பிறவிகளில் மேற்கொண்டு செய்ததாலோ, வையையே, இப்பேற்றுக்குரிய காரணத்தை நீயே உரைப்பாயாக

இப்படி அம் மங்கையர் நீராடுங்கால், மூங்கிலின் அழகை வென்று மிகுந்த தோள் அழகையுடையவள் ஒருத்தி, தன் காதில் நீலமலரைச் செருகிக் கொண்டு பக்கத்தில் நின்ற ஒருத்தியை நோக்கினாள். அவளது குறிப்பை அறிந்து அப் போது அந்த மங்கை அசோகந்தளிரைத் தன் காதில் செருகிக் கொண்டாள்.தான் சூடிய இளந்தளிர்ச் செம்மையால் நீலமலர்