286
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
மீது இளவெயில் படர்ந்தாற் போன்று ஆகும்படி செய்தாள். அதைக் கண்ட பின்னவள் முதலாமவளைச் சுட்டிக் குழை யணிந்த காதினையுடைய இவள் தன் செவிகளில் நீல மலர் அணிந்து இப்போது நான்கு விழிகளை உடையவளாக விளங்கினாள் என்று அவள் அழகைப் பாராட்ட, அது கண்ட மற்றொருத்தி மேலும் அழகுக்கு அழகு செய்பவளாய், அந்த அழகி கொற்றவை போல் தோன்ற வேண்டும் என எண்ணி, நெற்றிக் கண் போல் தோன்றும்படி அவளது நெற்றியில் ஒரு திலகத்தை இட்டாள். ஒருத்தி பவள வளையல் அணிந்த ஒருத்தியைப் பார்த்துத் தன் கையில் மரகதமணி போன்ற நிறம் உடைய குவளை மலரின் பசுமையான தண்டினை வளையலாய்ச் செய்து அணிந்து கொண்டாள். ஒருத்தி குளிரிப் பூவால் மாலை தொடுத்தாள், அங்ஙனம் தொடுத்தவளை ‘நீ இப்படி மாலை தொடுப்பதை நிறுத்துக’ எனத் தடையைச் செய்ப வளைப் போன்று மற்றொருத்தி அவள் காணுமாறு மல்லிகை மாலையின் இடை இடையே நெய்தல் மலரைக் கலந்து தொடுத்தாள். இவ்வாறு வையைக் கரையில் மங்கையர் ஆடி மகிழ்ந்தனர்.
முன்னம் வாழைமரத் துண்டைத் தழுவி நீரில் பாய்ந்து ஆடினான் ஒருவன். அப்போது அங்கு ஆயத்தாருள் நின்ற ஒருத்தியை அவன் கண்ட்ான். அப்பொழுதில், அவன் மனம் அழிந்தது. அதனால் விரைந்து ஒடும் வையைநீர் அவனது கையைத் தன் ஒட்டப்போக்கில் இழுத்துக் கொண்டு சென்றது.அவனது நெஞ்சத்தை அம் மகளிரின் அழகு வலிந்து இழுக்க, அவள் நிற்கும் நிலையிலேயே அவளது கண்கள் நிலைபெற்று நின்றன. நீரோ அவன் விரும்பிய அவளிடத்தில் இழுத்துச் செல்லாமல் தான் விரும்பிய வழியே இழுத்துச் சென்றது. அதைக் கண்ட அம் மங்கை அவன் பிரிவை ஆற்றாதவளாய்த் தன்னுடன் உள்ள மகளிருடன் நில்லாமல் அவன் பின்னே தொடர்ந்தாள். அவள் அங்ஙனம் செல்வ தற்குக் காரணமான அன்பின் தன்மையை அவள் தாய் அறிய வில்லை. அவளைத் தடுத்து, “ஏடி, நீ தனியே செல்லாதே! மீண்டும் நின் தோழியருடன் போய்க் கூடுக!’ எனக் கூறி விலக்கினாள். அதனால் அப் பெண் அழுதாள். அங்ஙனம்