பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

287


ஆக, கரையினை மோதி வந்தது கார்ப்பருவத்துச் சிவந்த விளங்கிய வையையின் வடிவம்.

“கார்காலத்தில் வரும் நீரைப் போல அன்றி தைந் நீரை, நீ குளிக்கும் அளவு உடையையாய் விளங்குகிறாய். நிறமும் தெளிந்து விளங்குகிறாய். ஆதலால் நீயே தக்காய்!” எனச் சிலர் பாராட்டினர். “எம் கணவர் எம் கழுத்தில் அமைத்துத் தழுவிய கைகளை அகற்றாமல் எம்மைத் தழுவ, அதனால் யாம் வீறு பெறுக என்று நின்னை வேண்டுகின்றோம்” எனச் சிலர் உரைத்தனர். “எம்மால் விரும்பப்பட்ட தலைவர் மொய்க்கும் வண்டைப் போன்று யாங்கள் தனியாய் இருந்து வருந்தும்படி எம்மை விட்டு நீங்காமல் எம்முடனே இருத்த லால் யாம் இன்பம் அடையும்படி அருள்வாயாக!” என்று வேண்டிக் கொண்டனர். எம் கணவரும் யாமும் கிழவர் கிழவியர் என உலகத்தவரால் கூறப்படாமல், எம் பேரிளம் பருவத்துக்குரிய ஆண்டு அடையும் வரையிலும் இளமையை இத் தைந்நீர்த் தவம் தர யாம் செல்வத்தோடும் உறவின ரோடும் நிலை பெறுமாறு அருள் செய்வாயாக!” என்று வேண்டினர் சிலர்.

இம் மங்கை கண்டவரைத் தாக்கி வருத்தும் தெய்வம் ஆவாள். அத்தகையவளை நீங்களும் பாருங்கள். இவளது கண் காமனின் கருவூலமும் படைக்கலங்களும் ஆகும். நீல நிறத்தை உடைய அம் மகளிர் ஒச்சித் தடை செய்யவும் நில்லாமல் அம் மாலையில் தேனை ஊதும் வண்டுகள் யாழ் போல் பாடுகின்றன. அவற்றைக் கேளுங்கள். பாடலின் பொருள் விளங்கும்படி பாடாதிருக்கவும், குரல் கொண்ட கிளையான இளிக்கு கிளையாகப் பொருந்திய அரும்பாலைப் பண்ணில் தோன்றிய மருதப் பண் என்ற இசையைக் கேளுங்கள். விளரிப்பாலையில் தோன்றும் யாம யாழினைத் தாளத்துடன் பொருந்தப் பாடி மேற் கொண்ட அந்தத் தாளத்துக்கும் கொளைச் சீர்க்கும் அப் பண்ணின் சீர்க்கும் ஏற்றபடி தம் சிறகுகளை விரித்து ஆடும் குளிர்ந்த இசையை இசைக்கும் தும்பியின் கூட்டத்தைக் காணுங்கள். ஒரு தும்பி தான் பொருந்திய மலரினை நெரித்தவளான ஒருத்தியைச் சினம் கொண்ட நெஞ்சுடனே முன்னரும் தாக்கிப் பின்னரும்