பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


தாக்குவதற்கு விரைந்து வருவதற்குக் காரணமான அதன் சினத்தின் தன்மையைக் காணுங்கள் என்று இப்படி அங்கே நிகழ்ந்த நிகழ்ச்சிகளை மைந்தர் ஒருவருக்கொருவர் சுட்டிக் காட்டி நின்றனர்.

இனிய தன்மையில் மேம்பாடு அடைந்த தேர்ச்சியை உடைய இசையுடன் பொருந்திய பரிபாடலால் வாழ்த்தப் படும் நீரையுடைய வையையே, ஒளிரும் அணிகலன்களையும் நறுமண நெற்றியையும் உடைய மகள் தன்மை மேம்பட்ட கன்னிமைத் தன்மை முதிராத மகளிடத்தில் மேற் கூறியபடி கைக்கிளைக் காமத்தைத் தரும் யாம் முந்தைய பிறவியிலே ஆற்றிய தவத்தால் இப் பிறவியில் நின்னிடம் இந்தத் தைந் நீராடலான தவத்தைப் பெற்றோம். அத் தவத்தை எல்லாரும் விரும்பத் தக்க நின் நீர் நிறைவில் மறு பிறவியிலும் யான் பெற வேண்டும். அருள்க.

வையத்தினும் மிகுந்த வையை வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி, விளிவு இன்று கிளையொடு மேல் மலை முற்றி, தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய் ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம், அகரு வழை ஞெமை ஆரம் இணைய தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி நளி கடல் முன்னியது போலும் தீம் நீர் வளி வரல் வையை வரவு. வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் அம் தண் புனல் வையை யாறு எனக் கேட்டு மின் அவிர் ஒளி இழை வேயு மோரும், பொன் அடர்ப் பூம் புனை திருத்துவோரும், அகில்கெழு சாந்தம் மாற்றி ஆற்றப் புகைகெழு சாந்தம் பூசுவோரும், கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும், வேர் பிணி பல் மலர் வேயுமோரும், புட்டகம் பொருந்துவ புகைகுவோரும், கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்,