28
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
47. பொய்யை அறிவோம் முள்ளெயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த அகன் பெரு வட்டி நிறைய, மனையோள் அரிகாற் பெரும் பயறு நிறைக்கும் ஊர! மாண் இழை ஆயம் அறியும் - நின் பாணன் போலப் பல பொய்த்தல்லே. - ஜங் 47 “முள்ளைப் போன்ற கூர்மையான பற்களையுடைய பாண்மகளின் இனிய கெளிற்று மீன் இடப்பட்ட அகன்ற பெரிய கூடை நிறைய இல்லாள் அரிந்த தாளையுடைய இடத்து விதைத்துப் பெற்ற பெரும் பயற்றைக் கொடுக்கும் ஊரனே! நினக்கு வாயிலாகப் புகுந்த பாணனைப் போல் நீயும் பொய் பல கூறுவை. இதனைச் சிறந்த அணியை அணிந்த ஆயத்தார் எல்லாரும் அறிவார். எனவே, நான் மெய் என்று கொள்ளும்படி இல்லை.” என்று தலைவி தலைவனைப் பார்த்துச் சொன்னாள்.
48. வருகையை விரும்பவில்லை!
வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் வராஅல் சொரிந்த வட்டியுள், மனையோள் -யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர!
வேண்டேம் பெரும நின் பரத்தை ஆண்டுச் செய் குறியோடு ஈண்டு நீ வரலே. - ஐங் 48 தலைவி, “மீன் வலை வீசுவதில் வல்ல மீனவன் மகனும் வெண்மையான பற்களையுடைய இளைய பாண்மகளும் வரால் மீனைக் கொணர்ந்து சொரிந்த கூடை நிறைய மனையவள் பழமையான வெண்ணெல்லைக் கொடுக்கின்ற ஊரனே! நின் பரத்தை அங்கு நின்னிடம் செய்த குறியுடன் இங்கு வருகின்ற நின் வருகையை யாம் விரும்போம்” என்று தலைவனைப் பார்த்துக் கடிந்து கூறினாள்.
49. யார்நிலம் சிதையப் பொய்?
அம் சில் ஒதி அசைநடைப் பாண்மகள் சில் மீன் சொரிந்து, பல்நெல் பெறுஉம்