பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


ஒருத்தி தன் கணவனை அமிழ்தம் போன்ற பார்வையால் பார்த்தாள். அவள் பொறுக்காது தன் மார்பில் அணிந்திருந்த மலர் மாலையை எடுத்து அதையே கோலாகக் கொண்டு தன் கணவனைப் புடைத்துத் தன் மார்பில் உள்ள வடத்தை எடுத்து அவனுடைய கைகளைக் கட்டினாள். இறுக்கி இறுக்கிப் பார்த்தாள். “நீ குற்றம் உடையாய்!” என்றாள் அவள் அவ்வாறு தன்னைக் கட்டியதற்குத் தன்னிடம் குற்றம் ஒன்றும் இல்லாமையால், அவன் அவளை வணங்கினான். நல்லாய்! யான் செய்த குற்றம் யாது?’ என்று வினவினான். அவனைக் காணுங்கள். “ஏடா! நின்னை ஒருத்தி நோக்கினாள். அவ்வாறு நோக்கியவள் நின்னால் சூள் பொய்க்கப் பட்ட வளாக இருக்க வேண்டும்!” என்று அவனது பிழையை எடுத்துக் காட்டினாள். காட்ட, அவன், “நல்லாய், எனப் பார்த்தவளை அறியேன். அவள் சூள் பொய்க்கப்பட்ட வள் என்பதையும் அறியேன்!” என்று சொல்லி பணிந்த சொற் களைச் சொல்லி இரைந்து உண்மையாகவே ஆணை யிட்டான். அதைக் கேட்ட மெல்லிய சாயலை உடைய அவள் பொறுக்கக் கூடிய சொற்களைச் சொல்லாமல், ஏடா, நீ இப்போது செய்யும் சூள்தான் என்ன? இதுவும் பொய்யான குளே! என்று கூறினாள். அதைக் சேட்ட அவன் மீண்டும் சூளில் மிக்கும், சினந்தும் அவளது ஊடலைப் போக்க முயன்றான். -

இவ்வாறு ஊடல் தீர்ந்த போதும் கூடாமல் ஊடி நின்றவள் அந்த நிலையினின்றும் புலவி நிலைமையில் நின்று மலரின் மணத்தையும் அழகையுமுடைய அரக்கு நீர் நிறைந்த வட்டினை அவனது மார்பில் எறிந்தாள். அந்த அரக்கு நீர் அவளது அழகிய மையுண்ட கண்ணான வேல்பட்ட புண்ணி னின்றும் குருதி சொரிவதைப் போல் சொரிந்தது. அவன் அந் நிலையைப் பொறுக்கவில்லை. பொறுக்காத வனாய் அவளிடம் பகைமை இல்லாதவனாய்த் தன் நெஞ்சம் நெகிழ்த லால் அவள் முன் நில்லாமல் அவ்விடத்தின்று நீங்கி நிலத்தில் விழுந்து வணங்கினான். வணங்குவதற்காக அவ்வாறு நிலத்தில் வீழ்ந்தவனைக் கண்ட அவள், அவனது மற்போருக்குப் பொருந்திய மார்பில் தான் வீசிய வட்டால் புண்பட்டு வீழ்ந்