பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

295


தான் எனக் கருதி அஞ்சி மயங்கி முன்னம் தான் கொண்ட எல்லாப் புலவியும் நீக்கிக் கூடச் செய்தலில், இந்த வையை நீர் இன்றே அல்லாது எக்காலத்தும் வன்மை யுடையது. அந் நிகழ்ச்சியையும் காணுங்கள் என்று காட்டினர்.

போரில் பகைவரை வெல்லும் படையையுடைய பாண்டி யனின் இந்த வையை ஆறு, மல்லிகை மலர், சண்பக மலர், முல்லை மலர், தாமரை மலர், வெள்ளல்லி மலர், செங்கழுநீர் மலர், தாமரை மலர், அரக்காம்பல் மலர், கஞ்சங் குல்லை மலர், மகிழ மலர், குருக்கத்தி மலர், பாதிரி மலர், நல்ல பூங் கொத்துக்களையுடைய நாகமர மலர், நறவ மலர், சுரபுன்னை மலர் என்ற இந்த எல்லா மலரும் மணம் வீசுவதற்கு இடமான இரு பக்கத்தும் உள்ள கரையை மோதிக் கலங்கியது. பின்பு பாறைக் கல்லையுடைய நிலம் போன்று அடையாத பரந்த கல்லணையால் தடையுண்டு தேங்கி நின்று இருள் மிக்க மாலையில் மிகவும் தெளிந்து வான் உலகத்தில் நிகழும் தொழி லைத் தன் நீர்நிழல் காட்டும். அந்த இருளை ஒட்டும் காலைப் போதில் கலங்கிய சிவந்த குருதியின் தன்மை உடையதாகும்.

நேரிய இறையான முன் கையையுடைய இம் மங்கை, அசோகின் சிவந்த புது மலரைத் தீயில் இட்டுச் சுட்டமையால் ஒளிமிக்க இயல்புடைய தொழிற் சிறப்புடைய காதணி போல் தொங்கும்படியாய்த் தன் செவியில் செருகிக் கொண்டு மலர் மலர்ந்த பூங்கொடி போல் ஒல்கி, ஒருவன் இட்டுச் சென்று போனவள் ஒருபக்கம் ஒதுங்கி வளையல் அணிந்த தனது முன் கையால் தன் தலையில் சூடியுள்ள மாலையை அழகாகத் திருத்தினாள். ஆகவே அவன் அவளுடைய காதலனே ஆக வேண்டும். இந்தக் காட்சியையும் காணுங்கள் என்று இப்படித் தாம் விரும்பியவற்றைக் காட்டினர்.

நீராடிய மகளிர் பெற்றிருந்த அணிகளிலிருந்து உதிர்ந்த நீரோட்டத்தை உடைய மணிகள் அவர் ஆடையில் செய்யப் பட்ட பூத் தொழிலைப் போல் நிறைந்து காணப்பட்டன என்று இவ்வாறு நீராடியவர் பலவாய்க் கூறியவை மதுரை யில் சென்று மிகுந்தது. நீராடியவர் சொல்லைவிட அவர் நீராடியதால் எய்திய அழகு மிக்கது. அங்ஙனம் மிக்க அந்த அழகு பிறர் அழகுடன் மாறுபட்டது. நீராடிய மகளிரின்