296
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
மார்பினின்றும் வழிந்து வீழ்ந்த தகரச் சாந்தினால் வையை ஆற்றின் மணல் சேறாகும் தன்மையை அடைந்தது. அந்த ஆற் றின் கரைகள் நீராடிக் கரை சேர்ந்தாரின் ஆடையினின்றும் ஒழுகும் நீரால் கார் காலத் தன்மை பெற்றது. அந் நீராட்டு விழா அம் மதுரையில் நடத்தலால் வானுலகம் சிறப்புற ஒழிந்தது.
வையையே, இவ் ஆரவாரம் உடைய பழையதாகிய மதுரையில் வாழும் மக்களுக்கு நின்னால் இன்பமும் அழகும் பல நல்லவை உள்ளன. ஆயின. ஆதலால் அம் மண்ணுலகம் அகன்ற இடம் உடையது என்றாலும் நின் புகழ் மிக விரிந்தது. ஆதலால் நின் புகழைத் தன்னிடம் அடக்க மாட்டாது.
வெள்ளம் பெருகி வற்றாது வாழ்க கரையே, கை வண் தோன்றல் ஈகை போன்ம் என மை படு சிலம்பின் கறியொடும் சாந்தொடும் நெய் குடை தயிரின் நுரையொடும் பிறவொடும் எவ்வயினானும் மீதுமீது அழியும் துறையே முத்து நேர்பு புணர் காழ் மத்தக நித்திலம் பொலம் புனை அவளி இழை, கலங்கல் அம் புனல் மணி வலம் சுழி உந்திய திணை பிரி புதல்வர் கயந் தலை முச்சிய முஞ்சமொடு தழிஇத் தம்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும் தத்து அரிக் கண்ணார் தலைத்தலை வருமே.
செறுவே, விடு மலர் சுமந்து பூ நீர் நிறைதலின் படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும் களி நாள் அரங்கின் அணி நலம் புரையும் காவே சுரும்பு இமிர் தாதோடு தலைத்தலை மிகூஉம் நரந்த நறுமலர் நன்கு அளிக்கும்மே. கரையூ ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல் கான்அல் காவும் கயமும் துருத்தியும் தேன் தேன் உண்டு பாடத் திசைதிசைப் பூ நலம் பூத்தன்று வையை வரவு. கருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து குரும்பையின் முலைப் பட்ட பூ நீர் துடையாள்