பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

297


பெருந் தகை மீளி வருவானைக் கண்டே இருந்துகில் தானையின் ஒற்றிப் பொருந்தலை பூத்தனன் நீங்கு எனப் பொய் ஆற்றால் தோழியர் தோற்றம் ஒர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின் நாற்றத்தின் போற்றி நகையொடும் போத்தந்து இருங் கடற்கு ஊங்கு இவரும் யாறு எனத் தங்கான் மகிழக் களிப் பட்ட தேன் தேறல் மாற்றிக் குருதி துடையாக் குறுகி, மரு(வ) இனியர் பூத்தனள் நங்கை பொலிக என நாணுதல் வாய்த்தன்றால் வையை வரவு.

மலையின் இழி அருவி மல்கு இணர்ச் சார்ச் சார்க் கரை மரம் சேர்ந்து கவினி மடவார் நனை சேர் கதுப்பினுள் தண் போது மைந்தர் மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ் தாஅய் மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய, வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல் எஞ்ஞான்றும் தேன் இமிர் வையைக்கு இயல்பு. கள்ளே புனலே புலவி இம் மூன்றினும் ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண் கண் கெண்டை பல் வளி வண்டனம் வாய் சூழ் கவினொடும் செல் நீர் வீவயின் தேன் சோரப் பல் நீர் அடுத்துஅடுத்து ஆடுவார்ப்புல்லக் குழைந்து வடுப்படு மான்மதப் சாந்து ஆர் அகலத்தான் எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்கத் தொடுத்த தேன் சோரும் வரை போலும் தோற்றம் கொடித் தேரான் வையைக்கு இயல்பு. வரை ஆர்க்கும் புயல் கரை, திரை ஆர்க்கும் இத் தீம் புனல், கண்ணியர் தாரர் கமழ் நறுங் கோதையர் பண்ணிய ஈகைப் பயன் கொள்வான் ஆடலால் நாள் நாள் உறையும் நறுஞ் சாந்தும், கோதையும், பூத்த புகையும், அவியும் புலராமை