பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

29


யாணர் ஊர! நின் பாண்மகன் யார் நலம் சிதையப் பொய்க்குமோ, இனியே? - ஐங் 49 “அழகிய ஐம்பால் கூந்தலையும் அசைந்த நடையை யும் உடைய பாண்மகள் சில மீன்களைத் தந்து, மிகுந்த நெல்லைப் பெறும் புதிய வருவாயையுடைய ஊரனே! நின் வாயில்ான பாண்மகன் இனி யாருடைய நலம் கெடுமாறு பொய் கூறுவானோ, மற்ற பரத்தையரும் அவனது பொய்யை யுணர்ந்து கொண்டாராகலான்” என்று வெறுத்துத் தலைவி

உரைத்தாள்.

50. வருந்துவோம் யாமும்

துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும் -

வஞ்சி ஓங்கிய யாணர் ஊர! -

தஞ்சம் அருளாய் நீயே நின்

நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே. - ஐங் 50

தோழி, “வஞ்சி மரங்கள் ஓங்கி வளர்ந்துள்ள புதிய வருவாயை உடைய ஊரனே! நின்னைத் தன் நெஞ்சத்தில் கொண்ட இவள் எளியள். ஆதலால் இவளுக்கு அருளுக. நின் பிரிவாற்றாமல் இவளும் அழுகின்றாள். நீ பிரிந்தாலும், பல நாள்கள் தங்கி விடுதலால் துணையானவர் செவ்வமே அல்லது இல்லம் சிறவாமையால் யாமும் வருந்துகின்றோம்!” என்று தோழி தலைவனுக்கு இடித்துச் சொன்னாள்.

தோழி பேசுகிறாள்

51. வெறுப்புக்குக் காரணம் நீர் உறை கோழி நீலச் சேவல் கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர! புளிங்காய் வேட்கைத்து அன்று, நின் மலர்ந்த மார்புஇவள் வயாஅ நோய்க்கே. - ஐங் 51 “நீரில் வாழும் நீல நிறத்தையுடைய சேவற் கோழியைக் கூர்மையான நகங்களை உடைய அதன் பெட்டை எண்ணி வேட்கை மிக்கு வாழும் ஊரனே, இவளது காதல் நோய்க்கு தின் பரந்த மார்பு புளிங்காய் வேட்கை தானும் விளைப்ப