தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
299
.
வழங்கும். நறுமணம் பொருந்திய பூம்பொழில்களிலும் குளங் களிலும் ஆற்றிடைக் குறைகளிலும் வண்டுகள் கள் உண்டு களித்து பண் பாடும்படி மலர்களால் ஆகிய அழகான திக்கு களில் எல்லாம் விளங்கியது.
வையை ஆற்றின் வெள்ள வருகை மேலும் நீராடக் கரையை அடைந்த மகளிர்களுள் தோழியர் ஒரு காதற் பரத்தையைச் சூழ்ந்து நின்று, மூங்கிலால் ஆன துருத்தி யினால் அரக்கு நீரை வீசினர். அப் பரத்தை தன் தெங் கிளங்காயைப் போன்ற முலைகளின் மீது பட்ட அதனைத் துடையாதவளாய் விளங்கினாள். தன் பெரிய ஆடையின் முன்தானையால் ஒற்றினாள். அவ் அமயத்தே அக் காதல் பரத்தையிடம் தலைவன் வந்தனன். அவனை அந்தத் தோழியர் கண்டனர். அவர்கள் பொய்யாய் அத் தலைவனை நோக்கி, ‘ஐயனே! இவள் பூப்பு எய்தினாள் ஆதலால் அவளை அணு காதே! நீங்குக” என்றனர். அதைக் கேட்ட தலைவன் பூப்பின் தோற்றத்தை ஒத்திருந்த மலர் மணம் கமழும் சிவந்த அரக்கு நீரின் நறுமணத்தினால் அவளுக்குப் பூப்பு இல்லை என்பதை உணர்ந்தான். ஆயினும் தோழியர் செய்த விளையாட்டால் தோன்றிய நகைப்புடனே அவ் இடத்தினின்றும் நீங்கிப், பெரிய கடலில் புகுதற்கு விரையும் வையை ஆற்று நீர் போல், விரைந்து அங்கிருந்து சிறு பொழுதும் தாமதம் செய்யாமல் அப் பரத்தையுடன் இல்லத்தில் கூடி மகிழும்படி சென்றான். அந்த இல்லத்தில் களிப்புத் தரும் பழத்தேனால் செய்த மதுவையும் அருந்தாமல் காதற் பரத்தையை அணுகினான். அவளது மார்பில் பட்ட குருதி நிறம் உடைய அரக்கு நீரை நன்கு துடைத்தான். அவளைத் தழுவினான். அத் தோழியர் இல்லத்தில் உள்ள முதிய பரத்தையர்க்கு அந்த விளை யாட்டைக் கூறினர். நகைத்தலுக்காக நம் நங்கை பூப்பு எய்தினாள் அவள் பொலிவுடையவள் ஆகுக என வாழ்த்தினர். அதைக் கேட்ட காதற் பரத்தைக்கு நாணம் உண்டாகியது.
சைய மலையினின்றும் இழிந்த அருவி போந்து வையை யாற்றின் இரு கரைதோறும் உள்ள மலர்க்கொத்துகள் நிறைந்த மரத்தைச் சேர்ந்து சேர்ந்து அவற்றின் மலர் உதிர்ந்தமையாலே அழகை அடைந்தது. மேலும் தன்னிடம்