பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

301


காமப் பன்றிகள் கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து, உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப மலை மாலை முற்றுபு முற்றுபு பெய்து சூல் முதிர் முகில் பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக் குருதிக் கோட்டு அழி கறை தெளி பெறக் கழிஇயின்று காலைக் கடல் படிந்து காய் கதிரோன் போய வழி மாலை மலை மணந்து மண் துயின்ற கங்குலான் வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம் தேன் ஆற்றும் மலர் நாற்றம் செறு வெயில் உறு கால கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி நாற்றம் தான் நாற்றம் கலந்து உடன் தழிஇ வந்து தரூஉம் வையை. தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று வெந் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப ஊர்ஊர் பறை ஒலி கொண்டன்று உயர் மதிலில் நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழிஇ திண் தேர்ப்புரவி வங்கம் பூட்டவும் வங்கப் பாண்டியில் திண்தேர் ஊரவும் வயமாப்பண்ணுந மதமாப் பண்ணவும் கயமாப் பேணிக் கலவாது ஊரவும் மகளிர் கோதை மைந்தர் புனையவும் மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும் முந்துறல் விருப்போடு முறை மறந்து அணிந்தவர் ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல் கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில குறுகி மாட மறுகின் மருவி மறுகுறக் கூடல் விழையும் தகைத்து தகை வையை. புகை வகை தைஇயினார் பூங் கோதை நல்லார் தகை வகை தைஇயினார் தார். வகைவகை தைஇயினார் மாலை மிகமிகச் சூட்டும் கண்ணியும் மோட்டு வளையமும் இயல் அணி அணி நிற்ப ஏறி அமர் பரப்பின் அயல் அயல் அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர்