பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

தி. அன்பொடு புணர்ந்த ஐந்தினை - மருதம்

இடு வளை ஆரமோடு ஈத்தான உடனாகக் கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்மின் செருச் செய்த வாளி சீற்றத்தவை அன்ன நேர் இதழ் உண்கணார் நிரை காடாக ஒடி ஒளித்து ஒய்யப் போவாள் நிலை காண்மின்

என ஆங்கு ஒய்யப் போவாளை உறழ்ந்தோள அவ் வாணுதல் வையை மடுத்தால் கடல் எனத் தெய்ய நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று செறி நிரைப் பெண் வல் உறழ்பு யாது தொடர்பு என்ன மறலினாள் மாற்றாள் மகள்

வாய் வாளா நின்றாள்

செறிநகை சித்தம் திகைத்து

ஆயத்து ஒருத்தி அவளை அமர் காமம் மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை பெண்மைப் பொருமைப் பிணையிலி ஐம் புலத்தைத் துற்றுவ துற்றும் துணை இதழ் வாய்த் தொட்டி முற்றா நறு நறா மொய் புனல் அட்டிக் காரிகை நீர் ஏர் வயல் காமக் களி நாஞ்சில் மூரி தவிர முடுக்கு முது சாடி மட மதர் உண்கண் கயிறாக வைத்துத் தட மென் தோள் தொட்டுத் தகைத்து மட விரலால் இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையைத் தொட்டு ஆர்த்தும் இன்பத் துறைப் பொதுவி கெட்டதைப் பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து, இவ் வையைத் தொழுவத்துத் தந்து வடித்து இடித்து மத்திகை மாலையா மோதி அவையத்துத் . தொடர்ந்தேம் எருது தொழில் செய்யாது ஒட விடும் கடன் வேளாளர்க்கு அன்று படர்ந்து யாம் தனி மார்பம் தண்டம் தரும் ஆரத்தான்மார்பும்