306
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
ஆன அணிகளை உடையவருமாகிய கூட்டம் மேலும் மேலும் வந்து மிக்கதாய் விரும்புதற்குக் காரணமான கரைப் பரப்பில் ஏறினர்.
அவ்வாறு வந்து நின்றவருள் சிலர் மற்றவர் அணிந்துள்ள ஆடை அணிகளைப் பார்ப்பதற்கு அவ்வவ் இடங்களில் சுற்றி வந்தனர். அவர்களுள் ஒரு தலைவன் தலைவிக் குரிய வளை யலையும் முத்து மாலையையும் ஒரு பரத்தைக்குத், தன் தலைவி அறியாமல் தந்திருந்தான். அத் தலைவியோடும் அத் தலைவனும் இருக்கும்போதே, அத் தலைமக்களுடன் வந்த தோழியர் காணாமற் போனதாய் எண்ணப்பட்ட தலைவியின் வளையலை அப் பரத்தையிடத்தே கண்டனர். ‘இவள் வளை யலை இழந்து வருந்திய தலைவியின் மாற்றாள் போலும்!” என்று அப் பரத்தையைக் சுட்டித் தம்முள் உரையாடினர். அவளைக் கூர்ந்து நோக்கினர். அதைக் கண்ட தலைவன் நாணம் கொண்டான். அதைக் கண்ட தோழியர் மீண்டும் தம்முள் ‘இதோ இந்த அணிகலன்களைத் திருடி இவளுக்குக் கொடுத்த கள்வனின் ஒளி மழுங்கிய முகத்தையும் பாருங்கள்! இவை நம் தலைவியின் அணிகலன்களே! ஐயம் இல்லை!” என்றனர்.
மேற்கண்ட வண்ணம் தலைவனின் நிலை பற்றித் தோழியர் பேசிக் கொண்டிருக்கும் போதே, அதனை அறிந்த அப் பரத்தை அம்பு போன்ற கண்களையுற்ற மை பூசப் பெற்ற விழிகளைக் கொண்ட மங்கையர் கூட்டமே தான் மறைந்து கொள்வதற்குரிய காடாகக் கருதிக் கொண்டு, தலைவியரின் தோழியர் தன்னைக் காணாமல் போகுமாறு ஒடி ஒளித்துக் கொண்டு தப்பப் போனாள். அத்தகையவளை மற்றவர்க்குக் காட்டி “அப் பரத்தையின் நிலைமையையும் காணுங்கள்; அவள் அணிந்துள்ள அவ் வளையல் நம் தலைவி உடையதே, இதனாலும் காணுங்கள்!” என்று கூறினர். அவ் இடத்தில், வையை ஆறு கடலில் சென்று புகுந்தது போல் செறிந்த அம் மங்கையர் கூட்டத்துடன் புகுந்து போகும் அப் பரத்தையைத் தோழியர் இவ் ஒளியுடைய பரத்தை நம் தலைவிக்கு மாற்றாளே என்று ஐயம் இல்லாமல் தெளிந்தனர். அப் பரத்தையைக் காண்பதற்காக மணற்பரப்பில் கூடியிருந்த