தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
307
பெண்டிர் கூட்டத்துடன் புகுந்து அவளைத் தேடிச் சென்றனர். மாற்றாளான அப் பரத்தை தன்னைத் தோழியர் தேடித் தொடர்ந்து வருதலை அறிந்து, அத் தோழியருடன் மாறு பட்டுப் பேசத் துணிவு கொண்டாள்; நீங்கள் என்னைத் தொடர்ந்து வருவதற்குரிய காரணம் யாது? என வினவி எதிர்த்தாள். அவ்வாறு அப் பரத்தை எதிர்த்த அளவில் அத் தோழியரைப் பின் தொடர்ந்து சென்ற செறிந்த பற்களை யுடைய தலைவி உள்ளம் திகைத்தாள். எதையும் சொல்ல முடியாமல் வாளா நின்றாள். -
அவ்வாறு அப் பரத்தை எதிர்த்த போது ஒரு தோழி, அப் பரத்தையை “விரும்பும் காம இன்பத்தைப் பெரிய பொய்யுடன் கலந்து அதைக் கொள்ள வரும் காமுகரை மயக்கும் விலைத் தொழிலையுடைய கணிகையே, தின் பெண் இன்பம் பலர்க்கும் பொதுவுடையது. ஆதலால் ஒருவராலும் பேணப்படாதவளே, ஐந்து பொறிகளால் அனுபவிக்கப்படும் ஐந்து புலன்களை மட்டுமே நுகரும் இயல்பு கொண்ட காமப் பன்றிகள் நுகர்தற்குரிய இரண்டு உதடுகளை உடைய தொட்டி போன்றவளே, அழகின் தன்மையுடைய வனப் பாகிய வயலில் முதிராத நறிய கள்ளாகிய வலிய நீரைப் பாய்ச்சிக் காம நெறியான கலப்பையைக் கட்டி எம் எருது சோம்பிக் கிடக்காமல் உழும் படைச்சாலே!
“மடப்பம் பொருந்திய மதர்த்த மை பூசப்பட்ட கண் களைக் கயிறாகக் கொண்டு தம் பெரிய தோளாக தறியில் கட்டித் தடுத்துக் கொண்ட நிறைய பொருள் தந்தவர்க்குக் காம இன்பத்தை ஊட்டும் போதே எம் வளையலும் ஆரமும் ஆகிய அணிகளையும் அணிந்து கொண்டு அவற்றால் ஆன அழகையும் காமுகர்க்கு ஊட்டும் இன்பம் அளித்தலில் இந்த வையைத் துறையைப் போல் பொதுவானவளே!
“ஏடி தீய எண்ணம் உடைய எருதைத் தேடிக் கண்டு பிடித்து இந்த விளையாட்டு மகளிர் கண்கள் காணும்படி அதனை வணங்கிக் கொணர்ந்து இந்த வையை ஆறு என்ற கொட்டிலில் புகும்படியாய் விட்டு அடித்து உரப்பி, மாலை யினையே சம்மட்டியாய்க் கொண்டு அடித்து, இந்த வழக்கை உரைத்தற்குரிய அறங்கூறு அவையத்தில் உள்ளவர் எல்லாம்