பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


அஃது எம் எருது என்பதை அறியும்படி செய்ய யாம் நின்னைத் தொடர்ந்து வந்தோம். ஏனென்றால் வேளாளர்க் குத் தம் எருதைத் தொழில் செய்யாது பிறரிடம் போய்த் தொழில் செய்யும்படி ஓடிவிடுவது முறையன்று!

“தனக்குரிய தலைவன் மார்பை நினக்குத் தண்டமாகத் தரும் முத்து மாலையை உடைய எம் தலைவியின் மார்பும் அவளது முத்து மாலையைக் களவினால் கொண்டு அணிந்து கொண்டிருக்கும் நின் மார்பும் ஒத்த தன்மை கொண்ட னவோ!” என்று வைது தோழி ஒருத்தி கூறினாள். அவன் அப்படிக் கூறுவதற்கு முன்பு, அத் தோழியால் தேடப்பட்ட அப் பரத்தை அவளது வசையைப் பொறுக்க மாட்டாத வளாய்த் தலைவியைக் குறித்துச் சில வசைச் சொற்களைச் சொன்னாள்.

அப்போது அந்த வையை ஆற்றுக் கரையில் அவர்கள் உரையாடலைக் கேட்டபடி நின்ற முதுமகளிருள் சிலர், பரத்தையை வெறுத்தவராய் அப் பரத்தையை நோக்கி, “ஏடி, கற்புடைமையால் எண்ணிய அளவில் பாவம் நீக்கும் தன்மை கொண்ட குலமகளை இங்ஙனம் சினவாதே! நீ கொடிய சொல் லைச் சொல்லிப்பேதைமை உடையை ஆயினாய்.இந்தப் பாவம் நீங்கும் பொருட்டு மடப்பம் உடைய மயில் போல் மென்மை கொண்ட தலைவியை வணங்க வருவாயாக!” என்றாள்.

அவள் தலைவியை ‘வணங்க வா’ என்றதும் அப் பரத்தை இது என்றைக்கும் நிலைத்துன்பமாய் முடிந்தது எனத் தனக்குள் கூறினாள். பின்னர் அம் முது மகளிருள் ஒருத்தியை நோக்கி, “அன்னையே, பகைவரைப் பகைவர் வணங்குதல் இழிந்த செயலாகும். உயர்ந்தோய், நின் உயர்வுடைமையால் அந்த இழிவை அறியவில்லை! அப்படியே மாற்றாளை மாற்றாள் வணங்குதல் பெருமையற்ற செயலே ஆகும்” என்றாள். w

“அழகிய மோசி மல்லிகை மாலையை அணிந்த மங்கையே, நீ பெரிதும் அன்பு பூண்டவன் என்னிடம் அன்பு கொண்டவள்.ஆதலால் இவ் வளையலையும் முத்து மாலையை யும் புணர்ச்சிக்கு விலையாய் எனக்குத் தந்தான். அழகுடை யவளே, யான் நின் அணிகலன்களைக் களவு கொண்ட