30
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
தன்றி நினைக்குந் தோறும் புலவிக்குக் காரணமாய் உள்ளது:” என்று தோழி தூது மறுத்துச் சொன்னாள். 52. நின் தேர் எங்கே? வயலைச் செங் கொடிப் பிணையல் தைஇச் செவ் விரல் சிவந்த சேயரி மழைக் கண் செவ் வாய்க் குறுமகள் இணைய, எவ் வாய் முன்னின்று - மகிழ்ந நின் தேரே? - ஐங் 52 “மகிழ்நனே! தலைவி வயலையின் செங்கொடியால் மாலை தொடுத்தாள். அதனால் விரல்கள் சிவந்தன. அவள் செவி வரிகளை உடைய குளிர்ந்த கண்களை உடையாள். சிவந்த வாயை உடையாள். இளையவள். அவள் அழுது வருந்த, நீ நிற்பதற்குக் குறித்த இடம் எது? சொல்வாய்.” என்று தோழி தலைவனைப் பார்த்து விளையாட்டாக வினவினாள்.
53. இவ்வேறு பாடு எதனால்? துறை எவன் அணங்கும், யாம் உற்ற நோயே? - சிறை அழி புதுப் புனல் பாய்ந்தெனக் கலங்கிக் கழனித் தாமரை மலரும் பழன ஊர, நீ உற்ற சூளே. - ஐங் 53 “அணையை உடைத்துக் கொண்டு வருகின்ற புதிய வெள்ளம் வயலுக்குள் புக, அக் கழனியில் உள்ள தாமரைகள் கலங்கி மலரும் வயல்களை உடையவனே, புனலாடிய நீர்த் துறையில் நீ நின்னுடைய காதற்பரத்தைக்குச் செய்து தந்த சூளுரையே அடைந்த நோய்க்குக் காரணமாகும். ஆதலால் அந்தத் துறையில் உள்ள தெய்வம் வருத்துமா? வருத்தாது” என்று தலைவியின் தோழி தலைவனிடம் கூறினாள்.
54. பஞ்சாய்க் கோதைக்கு அஞ்சினேன் திண் தேர்த் தென்னவன் நல் நாட்டு உள்ளதை வேனில்ஆயினும் தண் புனல் ஒழுகும்
தேனுர் அன்ன இவள் தெரிவளை நெகிழ, ஊரின் ஊரனை நீ தர, வந்த