தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
313
மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும் கழு நீர மஞ்சனக் குங்குமக் கலங்கல் வழி நீர் விழு நீர அன்று வையை வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன் உரு கெழு கூடலவரொடு வையை வரு புனல் ஆடிய தன்மை பொருவுங்கால் இரு முந்நீர் வையம் படித்து என்னை யான் ஊர்க்கு ஒரு நிலையும் ஆற்ற இயையா அரு மரபின் அந்தர வான் யாற்று ஆயிரம் கண்ணினான் இந்திரன் ஆடும் தகைத்து
- இளம்பூரணர் மேற்கோள் பரி பா 2 அழகான முகில் மிக்க மழையைப் பெய்தது. அதனால் இம் மாநிலம் தோன்றாதபடி மறைந்தது. உலகத்துக்குப் பாது காவலான நீரை முகில் வீழ்த்தியபோது, கண்டார்க்கு விருப்பம் உண்டாதற்குக் காரணமான வையை யாற்றில் பெருகியது வெள்ளம். நாகம் முதலிய மரங்கள் ஓங்கி வளர்ந்த மணி களுக்குப் பிறப்பிடமான சைய மலையில் அந்த மரம் முதலி யவை உதிர்த்த பல்வேறு நறிய மலர்களின் மணங்களையும் ஏற்று மணம் கமழ்ந்து நான்மாடக் கூடல் என்ற பெயரை யுடைய மதுரைக்கு வெள்ளம் விரைந்து வந்தது.
வையை ஆறு புதிய நீர் வருகையால் பொலிவுடைய தாயிற்று என்று சிலர் கூறினர். அதைக் கேட்ட அம் மதுரை யில் உள்ள மக்கள் எல்லாம் அப் புதிய நீரில் ஆட விரும்பினர். தூசிப் படையின் தன்மையை மேற்கொண்ட ஒரு செயலைப் போல விளங்கியது. ஒவ்வொருவரும் தம் தம் இயல்புக்கு ஏற்றபடி ஒப்பனைகளைச் செய்தனர். நல்ல நிறம் பொருந்திய பல்வேறு வகைப் பட்ட நீராடுவதற்குரிய நெட்டி முதலியவற்றால் செய்த அழகுப் பொருள்கள் கொண்ட நீர் அங்காடியில் போய்த் தம் இயற்கை அழகை அங்குள்ள பொருள்களால் அழகு செய்து கொள்ளலாயினர். தொழில் திறம் விளங்கத் தொடுத்த மாலையுடையவ ராய், தலையில் சூடும் மாலையுடையவராய், அனுபவித்தவர் வியக்கத்தக்க நுண்ணிய ஆடையை அணிந்தவராய், கூந்தலி