314
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
லும் பித்தையிலும் மண நெய் பூசிக் கொண்டவராய் மக்கள் சென்றனர். அவர்களுள் தாழாத பெண்மை நலத்தையும் மாந்தளிர் போன்ற நிற அழகையுமுடைய மகளிர் நிமிர்ந்த செலவையுடைய குதிரைகளை ஊர்ந்து சென்றனர். அக் குதிரைகளின் பக்கத்தில் உடல், அலங்கரிக்கப்பட்ட யானை களில் ஏறி ஆடவர் சென்றனர். மிக்க அழகுடைய வண்டி களிலும் தேர்களிலும் ஏறிச் சென்றனர் சிலர், மற்றும் சிலர் யாம் எவ்விடத்தும் பிரிந்து போய் ஒருவருக்கொருவர் காணப் படாதவர் ஆகக்கூடாது என்று தம் சுற்றத்தவரை உடன் சேர வாருங்கள் என்று தம்பக்கத்தில் கூட்டி அழைத்துச் சென்றனர்.
உடலுக்குப் பொருந்தச் சிலர் மெய்ப்பை அணிந்து செல்வர். வண்டியில் ஏறிச் செல்பவருள் சில மங்கையர் தம் கணவனோடு பிணங்குவர். அத் தலைவர் பணிமொழி பல கூறி அவருடைய ஊடல்ை அகற்றுவர். அப்படி ஊடல் தீர்ந் துழி அம் மங்கயைர் ஊடல் தீர்ந்து அவரோடு அளவாளவி மகிழ்ச்சி அடைவர். சிலர் கூத்தாடுவர். சிலர் பாடுவர். சிலர் ஆரவாரம் செய்வர். சிலர் வாய் விட்டு நகைப்பர். சிலர் சிரித்துக் கொண்டே ஓடுவர். சிலர் ஓடியதால் இளைப்பர். சிலர் தமக்குரிய உறவினரை அங்கும் இங்கும் போய்த் தேடுவர். இப்படி வையை நோக்கித் திரும்பிப் போவார் எவரும் இலர் கற்றோரும் கல்லாதவரும் கயமாக்களும் மக்களைப் பெற்ற வரும் கணவர் சொல் கடவாத கற்புடைய பெண்டிரும் இவர்களுக்கெல்லாம் வேந்தனான பொன்னால் ஆன தேரையுடைய பாண்டியனும் பொன் மதிலையுடைய மதுரை மக்களும் ஆகிய கூட்டம் வையைத் துறையைப் போய்ச் சேர்ந்தது.
வையை நீர் பிறைத் திங்களைப் போன்ற நெற்றியை யுடைய எல்லா மங்கையர் முன்பும் தம் காதலரின் தோள் களையே தெப்பமாகக் கொண்டு மறைவாக நீராடும் பரத்தை யரை அறியாதபடி மயக்கியது. இத்தகைய நீர் விளை யாடல்களை.
அவ் இடத்தில் நிகழக் கண்டு இவ் இடத்தே தலைவி யுடன் நீராடாது வாளா கிடக்கும். ஒரு தலைவன் காதற்