தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
315
பரத்தையுடன் நீரில் விளையாடினான். அப்போது அங்கு ஒர் இற் பரத்தை வந்தாள். அவளுக்குத் தன் மாலையை அளிக்க எண்ணித் தன் மார்பின் மாலையை ஒடும் நீரில் அத் தலைவன் விட்டான். அம் மாலையை அந்த இற் பரத்தை நீரினின்று எடுத்துத் தன் கூந்தலிலே அணிந்து கொண்டாள். அதைக் காதற் பரத்தை பார்த்து விட்டு விரைவாக அவளை அடைந்தாள். “ஏடி அம் மாலையை என்னிடம் கொடு கொடு!” என்று கேட்டாள். அங்ஙனம் கேட்ட காதற் பரத்தையை நோக்கி இற்பரத்தை, “ஏடி, இம் மாலை உன்னுடையதன்று. புதிய நீர் எங்கிருந்தோ கொணர்ந்து என் கூந்தலில் சேர்த்தது” என்றாள். அதைக் கேட்ட காதற் பரத்தை, “என்ன இது! என்ன இது!’ எனத் தனக்குள் சொல்லிப் பின் அவளை நோக்கி, “நுட்பமான தொழில் அமைந்த அணிகலன்களை உடைய பெண்ணே! அஃது அப்படி நிகழ்ந்தது பற்றி நான் வருந்தவில்லை! என்றாலும் இந்தப் புதிய நீர்தான் இப்போது நீ இங்கு உள்ளாய் என்பதை அறிந்து, இம் மாலையை நின்னிடம் கொணர்ந்து சேர்த்த செயல், ஒ! ஒ! மிகவும் வியப்புக்குரிய செயல்! அதை எண்ணியே வியப்படைகின்றேன்!” என்றாள்.
‘ஐயனே! நீரிலே இடப்பட்ட மென்மையான மலர் மாலை அயலார் இடத்தே சேராமல் காம நுகர்ச்சிக்குரிய விரும்பத் தக்க அழகியைக் குறிக்கொண்டு போய்ச் சேரும்படி நிகழ்ந்தது. இவ்வாறு நிகழ்ந்ததற்கு அவளுடைய நல்ல கொங்கைகளும் அவளால் நீராடப்பட்ட இந்தப் புதிய நீரும் அவளுக்குத் துணைக் காரணங்கள் ஆயின. ஏடா! இவை போக, நேரமும் இடத்தையும் அறிந்து மாலையை ஆற்றிலே விட்டவனே! அவள் அப் பூ மாலையை அணிந்து கொண்ட செய்கைக்கு நீயும் ஒரு காரணம்’ என்று சொல்லி அவனுடன் ஊடல் கொண்டாள்.
மற்ற மன்னர் தன்னை வணங்குதல் அன்றித் தான் ஒருவரையும் வணங்காத சிறப்பைப் பெற்ற பாண்டியனின் மதுரையில் வாழும் மணி போன்ற அழகையும், மாந்தளிர் போன்ற நிறத்தையும், முத்தைப் போன்ற பற்களையும், சிவந்த வாயையும் கற்புடைமையைக் காக்கும் காவலையும் உடைய