316
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
குலமங்கையர் மணிகளால் ஆன அணிகலன்களைத் தமக்கு அணிந்த உரிமையுடைய தம் தம் கணவன்மாருடன் நீராட வையை நீர் வடியாமல் விளங்கியது.
புதிய நீரில் சென்ற மலர் மாலையை நீ கொணர்ந்து முறைமையால் எம் கூந்தலை வந்து அடைந்தது எனச் சொல்லி அப் பூ மாலையை உலகம் அறியும்படி தம் கூந்த லில் சூடிக் கொண்டாள். இவ்வாறு ஊரவர் கூறுவர் இச் செய்தியை நினைக்கும் அளவிலே நினைப்பவர் நெஞ்சுக்கத் துன்பம் தரும் ஊடலுக்கு காரணமான இக் கொடுந்தன்மை தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் வந்து சேர்வதற்கு முன்பே, ஊரில் உள்ள அலர், மொழி வாயிலாக வந்து பரவியது. தலைவியின் செவியை இது கூடுமானால் சினந்து ஊடல் கொள்ள மாட்டாளோ? ஊடுவாள். இப்படிக் கூறும்படி புனலாட்டு நிகழ்ந்தது. நிகழ, பார்ப்பார், வையை நீர் ஈக்கள் மொய்ப்பதற்குக் காரணமான கள்ளைத் தன்னிடம் கொண்டிருப்பதால் தூய்மை இழந்து விட்டது என எண்ணி அந் நீரில் ஆடுவதை விட்டனர். பார்ப்பார் இவ் வையை நீரில் ஆடிய ஆடவர் மகளிர் அணிந்திருந்த நறுமணப் பொருள்கள் கலக்கப் பெற்றுத் துய்மை அற்றதாகி விட்டது. எனக் கருதிக் குளிப்பதை நீங்கினர். பார்ப்பார் இவ் வையை நீர் தேன் கலக்கப் பெற்று வழுவழுப்புக் கொண்டதாயிற்று என எண்ணி அந் நீரில் வாய் அலம்பலையும் கைவிட்டனர்.
வையை ஆற்றுநீர் விரைந்து ஆரவாரித்துத் துறையும் அழியும்படி வந்தது. அந் நீர் வரிசை வரிசையாக துரை களைச் சுமந்து கொண்டு வரும். நுரையுடன் மதகுகள் தோறும் புகுந்து போகும் அந்த நீர். மேலும் அங்கங்குக் கரை புரளும்படி உடைத்தும் செல்லும். இங்ஙனம் அந்த நீர் அலை புரளும் கடலில் புகும் அளவு மேலும் மேலும் வந்த புகுவதால் அவ் வெள்ளம் கரைக்கு அடங்கும்படித் தணிய வில்லை.
ஆடவரும் மகளிரும் மலை போல் உயர்ந்த புரசைக் கயிற்றை இட்டு அணி செய்யப்பட்ட தம் தொழிலை நன்கு பயின்ற மணிகளையுடைய பல யானைகளின் மேல் ஏறி ஊர்ந்து வரிசை வரிசையாய் வந்து சேர்ந்தனர். நிறம் மிக்க