தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
31
பஞ்சாய்க் கோதை மகளிர்க்கு
அஞ்சுவல், அம்ம அம் முறை வரினே! - ஐங் 54
‘திண்மையான தேர்களை உடைய பாண்டியனின் நல்ல நர்ட்டில் உள்ளதாகிய, வேனிற் காலத்தும் வற்றாமல் குளிர்ந்த நீர் பெருகுவது தேனுர், அதை ஒத்தவள் இவள். இவளுடைய வளைகள் நெகிழுமாறு, நீ பரத்தையர் தெருவில் பிரிந்து சென்றனை. அப்போழ்து நெய்யணி குறித்து அத் தெருவில் முறையே வரின் அங்கு நின்னால் தரப்பட்டு நின்னைச் சூழ்ந்து நிற்கும் பஞ்சாய்க் கோதை மகளிர்க்கு அஞ்சி நின்றேன்.”
55. நிறம் மாறியது நெற்றி
கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்,
தேர் வண் கோமான், தேனூர் அன்ன இவள்
நல் அணி நயந்து நீதுறத்தலின்,
பல்லோர் அறியப் பசந்தன்று, நுதலே. - ஐங் 55
தோழி, “கரும்பைச் சாறு பிழியும் எந்திரம் ஆண் யானை முழங்கும் முழக்கத்துக்கு மாறாக ஒலிக்கும் தேனூர். அது தேரினையும் கொடைத்தன்மையையும் உடைய மன்னனான பாண்டியனது அந்த ஊரைப் போன்ற இவளது நல்ல அழகை விரும்பி மணந்து கொண்டு மணந்த அணிமைக் காலத்திலேயே பரத்தமை ஒழுக்கத்தால் நயவாது பிரிந்து உறைதலால் இவளது நெற்றி பலரும் நன்கு அறியுமாறு பசலை கொண்டது” எனத் தோழி தலைவனை நெருங்கிச் சொன்னாள்.
56. நின் மொழியால் பயனில்லை!
பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா, வெல் போர்ச் சோழர், ஆமூர், அன்ன இவள் நலம் பெறு சுடர் நுதல் தேம்ப, எவன் பயம் செய்யும், நீ தேற்றிய மொழியே? - ஐங் 56 “பகற்பொழுதின் ஒளியையுடைய விளக்குகளால் இரவுப் பொழுதினை அறிய இயலாத வெல்லும் போரையுடைய சோழ மன்னரின் ஆமூர், அந்த ஆமூரைப் போன்று விளங்கு பவள் தலைவி. இத் தகையவளின் நலம் பெற்ற ஒளி திகழும்