தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
33
நினக்கு மருந்தாகிய யான், இனி,
இவட்கு மருந்து அன்மை நோம்என் நெஞ்சே! - ஐங் 59
“மகிழ்நனே! கேட்பாயாக! மயக்கம் உடைய நெஞ்சில் எழுந்த வருத்தம் நீங்கப் பண்டு நீ ஆற்றும்படி மருந்தாய்ப் பயன்பட்டேன் யான் இப்போது இவளின் ஆற்றாமையைத் தீர்க்கமாட்டாமையின், அவ்வாறு பயன்படும்படி அமை கல்லேன். எனவே இவளை ஆற்றுவித்தல் குறித்து என் மனம் வருந்துகின்றது” எனத் தோழி தலைவனுக்கு உரைத்தாள்.
60. இவள் தந்தை கை வேலுக்கு அஞ்சுக
பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும்
கழனி ஊர! நின் மொழிவல் என்றும்
துஞ்சுமனை நெடு நகர் வருதி,
அஞ்சாயோ இவள் தந்தை கை வேலே? - ஐங் 60
“வயல்களில் வாழும் கம்புட் கோழி அழைக்கப்படுதலை யுடைய பெண் கோழியை அழைக்கும் கழனிகளை உடைய ஊரனே! நினக்கு ஒன்றைக் கூறுவேன், கேள், உள்ளே இருப்பவர் இனிதாக உறங்கும், மனைகளையுடைய பெரிய நகரத்தில் எந்த நாளும் இரவிலே வருகின்றாய். ஆதலால் இவள் தந்தையின் கையிலே உள்ள வேலுக்கு அஞ்ச மாட்டாயோ? யாங்கள் பெரிதும் அஞ்சி வருந்துகின்றோம்!” என்று தோழி மணவாது காலம் தாழ்த்திய போது தலை வனைப் பார்த்துச் சொன்னாள்.
தலைவி பேசுகிறாள்
61. திருமணம் செய்ய விரும்பு!
நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
நெடு நீர்ப் பொய்கைத் துடுமென விமூஉம்,
கை வண் மத்தி, கழாஅர் அன்ன
நல்லோர் நல்லோர் நாடி,
வதுவை அயர விரும்புதி நீயே. - ஜங் 61
“நறுமணம் உடைய பிஞ்சுகளை உடைய மா மரத்தில்
பழுத்து விழும் இனிய பழம், ஆழ்ந்த நீரையுடைய பொய்கை