பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


யில் துடும்’ என்ற ஒசையுடன் விழும் இயல்பு வாய்ந்த, கொடைத் தன்மையுடைய மத்தி என்பவனின் கழார் என்ற ஊரைப் போன்ற நல்ல மகளிரையே நீ மணம் செய்து கொள்ள விரும்புவாய் அங்ஙனம் இருக்க, இனி என்னிடத்து இப்படி நிகழாது என்று கூறுவது ஏன்?” என்று தலைவி தலைவனைப் பார்த்து வினவினாள்

62. இப்போது நின் தேர் எங்குள்ளது? இந்திர விழவில் பூவின் அன்ன புன் தலைப் பேடை வரி நிழல் அகவும் இவ் ஊர் மங்கையர்த் தொகுத்து, இனி எவ் ஊர் நின்றன்று - மகிழ்ந நின் தேரே? - ஐங் 62 “மகிழ்நனே! மலரைப் போன்று புல்லிய தலையை உடைய குயிற்பேடை செறியாத நிழலில் இருந்து கூவும் இவ் ஊரில் அடுத்த இந்திர விழாவில் விரும்பிய மங்கையர் பலரைக் கொணர்ந்து தொகுத்த நின் தேர் இப்போது எந்த ஊரில் போய் நிற்கின்றது?’ என்று தலைவி தலைவனை நோக்கிப் போற்றா ஒழுக்கம் நீக்க வினவினாள்

63. எச்சிற் கனி உண்ணேன்!

பொய்கைப் பள்ளிப் புலவு நாறு நீர்நாய் வாளை நாள் இரை பெறுஉம் ஊர! எம்நலம் தொலைவதாயினும் துன்னலம் - பெரும - பிறர்த் தோய்ந்த மார்பே. - ஐங் 63 “பெரும, பொய்கையில் வாழும் புலால் நாறும் நீர் நாய் வாளை மீனை நாள் இரையாகப் பெறும் அத்தகைய ஊரனே, நின்னைக் கூடி முயங்காத போது எம் அழகு முற்றும் கெடுவ தானாலும், பிறரைக் கூடித் தழுவிய நின் மார்பை யாம் கூட மாட்டோம்” என்று தலைவி வெறுத்து உரைத்தாள்

64. பரத்தையுடன் புனலாடப் பலர் பார்த்தனர்

அலமரல் ஆயமோடு அமர்துணை தழிஇ நலம் மிகு புதுப் புனல் ஆடக், கண்டோர்