தொகை - வகை - உரை த. கோவேந்தன் : J5
ஒருவரும் இருவரும் அல்லர்; பலரே தெய்ய எம் மறையாதீமே! - ஜங் 64 “சுழன்று திரியும் ஆயத்தாருடன் நின்னால் விரும்பப் பட்டு நினக்குப் புணர் துணையான பரத்தையைத் தழுவிக் கொண்டு நீ அழகிய புதிய புனலில் ஆடப் பார்த்தவர் ஒருவரா இருவரா பலர் ஆதலால் அதை நீ எமக்கு மறைக்க வேண்டா” என்று தலைவி புறக்கணித்து தலைவனை இடித்து உரைத்தாள்
65. மகனைப் பெற்ற என்னை மருவாதே கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல் சுரும்பு பசி களையும் பெரும் புனல் ஊர! புதல்வனை ஈன்ற எம்மேனி முயங்கன்மோ தெய்ய, நின் மார்பு சிதைப்பதுவே. - ஐங் 65 “கரும்பை நடுவதற்குச் செய்த பாத்தியில் தழைத்து வளர்ந்த நீர் ஆம்பல் அங்கு வரும் வண்டுகளின் பசியைத் தன்னிடத்துத் தேனால் போக்குகின்ற ஊரனே, புதல்வனைப் பெற்று முதிர்ந்த எம் மேனியைத் தழுவ வேண்டா அது நின் மார்பின் அழகைக் கெடுத்து விடும்” என்று தலைவி ஆற்றாமையால் தலைவனைப் பார்த்துக் கூறினாள்
66. எவள் தடுத்தவள்?
உடலினென் அல்லேன்; பொய்யாது உரையோ;
யார் அவள் மகிழ்ந தானே - தேரொடு,
தளர்நடைப் புதல்வனை உள்ளி, நின்
வள மனை வருதலும், வெளவியோளே? - ஐங் 66
“மகிழ்நனே உருட்டி விளையாடும் சிறிய தேரின் பின் தளர்ந்த நடையை உடையவனாய்ச் செல்லும் புதல்வனை விரும்பி நீ நின் இல்லத்துக்கு வரும்போது நின்னைத் தடுத்துச் சென்றவள் எவள்? கூறுக யான் சினத்துடன் இதனை வினவவில்லை, பொய் கூறாது உண்மையை சொல்லுக” என்று தலைவி தலைவனிடம் புலந்து கூறினாள்