36
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
67. பழித்தவள் அறியாமையள்!
மடவள் அம்ம, நீ இனிக் கொண்டோளே - ‘தன்னொடு நிகரா என்னொடு நிகரிப் பெருநலம் தருக்கும் என்ப; விரிமலர்த் தாது உண் வண்டினும் பலரே, ஒதி ஒள்நுதல் பசப்பித்தோரே. - ஐங் 67 “நீ இப்போது பழகும் பரத்தை தன்னுடன் நிகர் இல்லாத என்னுடன் தன்னை ஒப்பாகக் கருதாத் தன் பெருநலத்தை வியந்து என்னைப் பழித்துக் கூறினாள் என்பர் முன்பு நின்னால் நுகரப்பட்டு ஒள்ளிய அழகிய நெற்றி நிறம் மாறப்பட்ட மகளிர் வண்டினம் தேனையுண்டு கழித்த மலரி னும் பலர் அதனை அவள் அறியாள் ஆகலான் அவள் அறியாமை நிரம்பிய இளையளே ஆவாள்’ என்று தலை வனைக் கண்டு காணாதது போலப் பார்த்துத் தலைவி துது வந்தவரிடம் கூறினாள்
68. அடக்கம் அற்றவளோ அவள்? கன்னி விடியல், கணைக் கால் ஆம்பல் தாமரை போல மலரும் ஊர! பேணாளோ நின் பெண்டே - யான் தன் அடங்கவும் தான் அடங்கலளே? - ஐங் 68 “திரண்டு தண்டையுடைய ஆம்பல் விடியற் காலத்தில் தாமரையைப் புோல் மலரும் ஊரனே, நான் அடங்கும் ஆறு என்று அடங்கியிருக்கவும், அவள் தான் அடங்காது யான் புறம் சொன்னேன் எனப் பிறர்க்குக் கூறுகின்றாளாத லான் நினக்குப் பெண்டான காதற்பரத்தை அடக்கத்தைப் பொருளாகக் கொள்ளாதவளோ?” எனத் துணிவாய்த் தலைவனிடம் தலைவியுரைத்தாள்
69. மறுப்பதேன் நீ? கண்டனெம் அல்லமோ, மகிழ்ந நின் பெண்டே? பலர் ஆடு பெருந் துறை மலரொடு வந்த தண் புனல் வண்டல் உய்த்தென, உண்கண் சிவப்ப, அழுது நின்றோளே! - ஐங் 69