தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
37
“மகிழ்நனே! பலரும் கூடி விளையாடும் நீர்த்துறையில் மலருடன் பெருகி வந்த குளிர்ந்த புனல் விளையாட்டுக்காகத் தான் அமைத்திட்ட பாவையைச் சிதைத்தது, மையுண்ட க்ண்கள் மேலும் சிவக்க அழுதபடி நின்றவள் நின் பெண்டே ஆவாள் யாம் அவளைத் தெளியக் கண்டோம் ஆதலால் நீ இல்லை என மறுப்பது ஏன்?” எனத் தலைவி தலைவனைப் பார்த்து கொதித்து வினவினாள்
70. யாம் பேய் அனையம்!
பழனப் பல்மீன் அருந்த நாரை கழனி மருதின் சென்னிச் சேக்கும் மா நீர்ப் பொய்கை யாணர் ஊர! தூயர் நறியர் - நின் பெண்டிர்; போய் அனையம், யாம்; சேய் பயந்தனமே. - ஐங் 70 தலைவி, “பழனங்களில் உள்ள பல மீன்களை உண்ட நாரை கழனியில் உள்ள மருத மரத்தின் உச்சியில் தங்கும் மிக்க நீரையுடைய பொய்கையையும் புது வருவாயையும் உடைய ஊரை உடையவனே, யாம் மகவைப் பெற்றுப் பேயினைப் போல் விளங்கினோம் ஆனால் நின் பெண்டிர் தூய்மையும் நறுமணமும் உடையவர் ஆதலால் அவரிடமே செல்லுக!” என்று தலைவனைப் பார்த்துச் சூட்டுடன் சொன்னாள்
ாடல்
71. பழிச்சொல் மறைத்தல் முடியுமோ?
சூது ஆர் குறுந் தொடிச் சூர் அமை நுடக்கத்து நின் வெங் காதலி தழிஇ, நெருநை ஆடினை என்ப, புனலே, அலரே மறைத்தல் ஒல்லுமோ, மகிழ்ந? புதைத்தல் ஒல்லுமோ, ஞாயிற்ற ஒளியே? - ஐங் 71 “மகிழ்நனே சூதாடுகாய் போன்ற மூட்டுவாயை உடைய சிறிய தொடியும் வளைவு பொருந்திய வளையும் உடைய நின்னால் விரும்பப்பட்ட நின் காதலியான பரத்தையைத் தழுவிக் கொண்டு நேற்று நீ புனலாடினாய் என்று பலரும்