பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


கூறுகின்றனர் ஞாயிற்றின் ஒளியை எதனாலும் சிறிதும் மறைக்க முடியாது. அது போன்று நீ புனலாடியதால் எழுந்த பழிச்சொல் தினது மாயப் பொய்ம் மொழிகளால் சிறிதும் மறைக்க முடியாது” என்று தலைவி தலைவனைப் பார்த்துக் கொதித்துக் கூறினாள்

72. நீராடுதற்குத் துணையானாள் வயல் மலர் ஆம்பல் கயில்அமை நுடங்கு தழைத் திதலை அல்குல், துயல்வரும் கூந்தல், குவளை உண்கண், ஏளர் மெல்லியல் மலர் ஆர் மலிர் நிறை வந்தெனப், புனலாடு புணர்துணை ஆயினள், எமக்கே! - ஐங் 72 ‘வயலில் மலர்ந்த ஆம்பற் பூவால் கட்டப்பட்ட மூட்டு வாய் பொருந்திய அசையும் தழையையும் மென்மையான அல்குலையும் அசையும் கூந்தலையும், குவளை மலர் போன்ற மை பூசப்பெற்ற கண்களையும், அழகும் மென்மைத் தன்மை யும் பொருந்திய இயல்புடையவள் முன்பு யாம் களவில் ஒழுகிய காலத்தில் பல வகைப் பூக்களைச் கமந்து புதுநீர் வர அதில் நீராடுதற்கு எமக்குத் துணை ஆனாள்,” என்று தலைவன் தோழிக்குத் தலைவி கேட்கச் சொன்னான்

73. மீண்டும் புனலாட விரும்புகிறேன்

வண்ண ஒண் தழை நுடங்க, வால் இழை

ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக்,

கள்நறுங் குவளை நாறித்

தண்ணென்றிசினே, பெருந்துறைப் புனலே. - ஐங் 73

“வெண்மையான அணிகலனையும் ஒள்ளிய நெற்றியை யும் உடைய தலைவி அழகிய தழையுடை இடையில் கிடந்து அசையப், பண்டு களவில் பெருந்துறை நீரில் விளை யாடுதற்காகப் புகுந்தாள் அது தேன் பொருந்திய நறுமணம் உடைய குவளையின் மணம் கமழ்ந்து குளிர்ந்ததாக ஆயிற்று ஆதலால் இப்போதும் அந்தப் புனலாட்டை நான் விரும்புகி றேன்” என்று தலைவன் தலைவி கேட்பத் தோழியிடம் சொன்னான்