தொகை - வகை - உரை : த. கோவேந்தன் :
அன்பொடு புணஇது ஐதிணை
ஆ upi நாகரிக நாடுகளில் தமிழகம் தலைசிறந்த ஒன்றாகும். சீனமும் தமிழும்தான் இன்றும் உயிர்ப்போடு -ல் உள்ளன. தமிழிலக்கிய வரலாறு மிகமிகத் தொன்மையானது. கி.மு. 3000-த்திலிருந்து கி.பி. 300 வரை பரப்புக்குட்பட்டது. நாகரிக முதிர்ச்சியிலும் பண்பாட்டு நிலையிலும் இயற்கையோடியைந்த காலங்கள் முச்சங்கங்கள் நிலவின காலம்.
ஈராயிரமாண்டு காலப் புலமைச் சான்றோர்களின் பாடல்களைக் கடற்கோளுக்கும் வந்தேறிகளின் அழிவுக்கும் பின்னும் அகம் என்றும் புறம் என்று தொகுக்கப்பட்டன. அவை:
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று இத் திறத்து எட்டுத் தொகை.
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சி, பட்டினப் பாலை கடாத்தொடு பத்து
பாட்டும் தொகையுமாகப் பாடினோர் ஒருகாலத்தவர், ஒரு நாட்டவர் அல்லர் ஒர் ஊரினர் அல்லர். குமரி முதல் வடவேங்கடம் வரை பல்வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள்.
இன்று நமக்குக் கிடைத்துள்ள பாடல்கள் தொகை - பாட்டு நூற்படி மொத்தம் 2279 ஆகும். அகம் புறம் இரண்டும் பாடிய சங்கச் சான்றோர்கள் 238 பேர் ஆவர். மொத்தப் பாடல்களில் 102 புலவர்களின் பெயர் தெரியவில்லை. இவர்களை நீக்கிப் பெயர் தெரிந்தவர்கள் 472 பேர் ஆவர்.
அகப் பாடல்கள் அடி எல்லையைக் கொண்டும் பாவகையைக் கொண்டும் தொகுக்கப் பெற்றவை. ஐங்குறுநூறு 500; குறுந்தொகை 40; நற்றிணை 400 கலித்தொகை 149; பரிபாடல் 8 பத்துப்பாட்டு 4 - ஆக 1862 பாடல்கள் அகத்திணை வாழ்வு பற்றியவை.