பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


தெய்வம் போன்று தன் நலம் மேம்படலானாள் ஆதலால் நீ அதனை மறைப்பது ஏன்?” என்று தலைவனை வினவினாள்

77. பழிகூறப் புனலாடுவோம் வா

அம்ம வாழியோ, மகிழ்ந நின் மொழிவல்; பேர் ஊர் அலர் எழ நீர் அலைக் கலங்கி, நின்னொடு தண் புனல் ஆடுதும், எம்மொடு சென்மோ, செல்லல், நின் மனையே. - ஐங் 77 பரத்தை, தலைவனிடம், “அன்பனே, உனக்கு ஒன்றைக் கூறுவேன், கேள்! நீ நின் மனைக்குச் செல்லாமல் எம்முடன் கூடி வருவாயாயின், இப் பெரிய ஊர் பழி கூற, நீர் அலைப்ப தால் கலங்கி மகிழ்ச்சி மிகும்படி நாம் குளிர்ந்த புனலில் ஆடுவோம் வாராய்” என்று கூறினாள்

78. புதிய நீரில் ஆட வா

கதிர் இலை நெடு வேற் கடு மான் கிள்ளி மதில் கொல் யானையின், கதழ்பு, நெறி வந்த, சிறை அழி புதுப்புனல் ஆடுகம் எம்மொடு கொண்மோ, எம் தோள் புரை புணையே. - ஐங் 78 தோழி, “மகிழ்ந நின் இல்லத்துக்குப் போய் நின் மனைவி யுடன் கூடிப் புனலாடுவதை விடுத்து, எம்முடன் வந்து, புணையைப் போன்ற எம் தோளைப் பற்றிப் புனல் ஆடுவா யாயின், யாம் ஒளி வீசும் இலையையுடைய நீண்ட வேலும் விரைவான ஒட்டத்தையுடைய குதிரையையும் உடைய கிள்ளியிள் பகைவரின் மதிலை அழிக்கும் யானை போல் தன்னெறியில் விரைந்து வந்து கரையை அழிக்கும் புதிய நீரில் நின்னுடன் ஆடுவோம் வா” என்று தலைவனை நோக்கிச் சொன்னாள்.

79. நீ யார் மகனை? புதுப் புனல் ஆடி அமர்த்த கண்ணள், யார் மகள் இவள் எனப் பற்றிய மகிழ்ந’ யார் மகள் ஆயினும் அறியாய், நீ யார் மகனை, எம் பற்றியோயே? - ஐங் 79