பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

41


பரத்தையின் தோழி, “புதிய நீராடிச் சிவந்த கண்ணை உடையவளான இவள் யார் மகள் எனச் சொல்லிக் கைப் பற்றியவனே, மகிழ்ந, இவர் யார் மகளாயினும் அறியாமல் எம் கையைப் பற்றினாய் ஆதலால் நீ யார் மகன்? அதனை முதலில் கூறுக” என்றாள்

80. ஊடல் கொள்ளோம்

புலக்குவம்அல்லேம், பொய்யாது உரைமோ!

நலத்தகு மகளிர்க்குத் தோட் துணை ஆகித்,

தலைப் பெயல் செம் புனல் ஆடித்

தவநனி சிவந்தன மகிழ்ந நின் கண்ணே. - ஐங் 80

தலைமகள், “மகிழ்ந, நற்குணங்களால் தகுதியுடைய வரான மகளிர்க்குத் தோள் துணையாகி, முதற்பெயலான மழையால் பெருகி வந்த புதிய நீரில் ஆடியதால் நின் கண்கள் மிகவும் சிவப்பை அடைந்தன. அஃது உண்மையே அன்றோ? சொல்லுக அது பற்றி யாம் புலத்தல் கொள் ளோம் நீ பொய்யாது கூறுக’ என்று வருந்திக் கூறினாள் தலைவனிடம்

வருந்திடஊடல் 81. மணாட்டி வருந்துவாள்!

குருகு உடைத்து உண்ட வெள் அகட்டுயாமை

அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும்,

மலர் அணி வாயிற் பொய்கை, ஊர! நீ

என்னை நயந்தனென்’ என்றி, நின்

மனையோள் கேட்கின், வருந்துவள் பெரிதே. - ஜங் 81

பரத்தை, “குருகுகள் உடைத்து உண்டு கழித்த வெண்மை யான ஆமை இறைச்சியை, அரிப்பறையை முழக்கும் உழவர், தம் மிக்க உணவுடன் கூட்டி உண்ணும் மலரால் அழகுடைய துறையை உடைய ஊரனே, நீ என்னை விரும்பினேன் என்று கூறுகின்றாய் இதனை நின் மனைவி கேட்பின் பொறுத்துக் கொள்ளாமல் மிகவும் வருந்துவாள்” என்று தலைவனை நோக்கிக் கூறினாள்