42
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
82. பாண திரும்புக
வெகுண்டனள் என்ப, பாண நின் தலைமகள் - ‘மகிழ்நன் மார்பின அவிழ்இணர் நறுந்தார்த் தாது உண் பறவை வந்து எம் போது ஆர் கூந்தல் இருந்தன. எனவே, - ஜங் 82 தலைமகள் பாணனை நோக்கி, “பாணனே, மகிழ்நனின் மார்பில் உள்ள முறுக்கு அவிழ்ந்த மலர்க் கொத்துகளால் கட்டப்பட்ட நறுமணமுடைய மாலையில் தேனை உண்ட வண்டினம், பின்பு என் மலர்க் கூந்தலில் தங்கின என்று அவளுக்குப் பக்கத்தில் உள்ளவர் கூறக் கேட்டலும், நின் தலைவியான பரத்தை வெகுண்டாள் என்று பலரும் உரைக் கின்றனர். இதையும் பொறுத்துக் கொள்ளாதவள். நீ இங்கு வருவதை அறியின் மிகவும் சினம் கொள்வாள். ஆதலால் நீ விரைவாய் அகன்று போவாயாக!” எனக் கூறினாள்.
83. மெல்ல மெல்ல நீங்குவாய்!
மணந்தனை அருளாய்ஆயினும் பைபயத் தணந்தனை ஆகி, உய்ம்மோ, நும் ஊர் ஒண் தொடி முன் கை ஆயமும் தண் துறை ஊரன் பெண்டு எனப் படற்கே. - ஐங் 83 தலைவி, தலைவனை நோக்கி, “மகிழ்ந, எம்மை மணந்து கொண்ட நீ எமக்கு நின் அருளை நெடிது செய்யாது போனாலும் எம் ஊரில் உள்ள தொடியணிந்த முன் கையை யுடைய பரத்தையர் பலரும் தண்துறையூரனாகிய நினக்குப் பெண்டு எனக் கூறப்படும் சிறப்புப் பெறுமாறு மெல்ல மெல்ல நீங்கி ஒழுகுவாய்!” என்று கூறினாள்.
84. என் ஆவாளோ தலைவி! செவியில் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள், கண்ணின் காணின், என்னாகுவள் கொல் - நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் - தைஇத் தண் கயம் போல, பலர் படிந்து உண்ணும் நின் பரத்தை மார்பே? - ஜங் 84