பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

43


தோழி தலைவனை நோக்கி,"மகிழ்ந நறுமண மலர்களை அணிந்த கூந்தலையுடைய மகளிர் ஆடும் தைத் திங்களின் குளிர்ந்த நீர்நிலை போல் பலர் முயங்கி இன்பம் நுகரும் நின் மார்பைச் சிறப்பித்து மற்றவர் கூறத் தன் காதால் கேட்பினும் சொல்வதற்கு அரிய சினம் கொள்ளும் இவள், ப்ரத்தை செய்த குறியுடன் தோன்றும் அதனைத் தன் கண்களாலேயே நேரில் காண்பாளாயின், என்ன ஆவாளோ?” என்று உரைத்துத் துதினை மறுத்தாள்.

85. நகைக்க மாட்டாரோ? வெண் நுதற் கம்புள் அரிக் குரற் பேடை தண் நறும் பழனத்துக் கிளையோடு ஆலும் மறு இல் யாணர் மலி கேழ் ஊர! நீ சிறுவரின் இனைய செய்தி, நகாரோ - பெரும! நின் கண்டிசினோரே? - ஐங் 85 தலைவி தலைவனை நோக்கி, “வெண்மையான தலையை யுடைய கம்புள் கோழியின் அரிக்குரலையுடைய பெட்டைக் கோழி குளிர்ந்த நறுவிய நிலங்களில் உள்ள மற்றப் பறவை களுடன் தங்கும் குற்றம் இல்லாத புது வருவாய் மிக்க ஊரை உடையவனே, நீ சிறுவரைப் போலப் பின்னால் இருந்து வருந்தத் தக்கனவற்றைச் செய்கின்றாய். ஆதலால், பெரும, நின்னைக் கண்டவர் இச் செயல் பற்றி நகுதலைச் செய் வாரோ” என்று உரைத்தாள்.

86. நின் மனைவியுடன் இன்புறுக! வெண் தலைக் குருகின் மென் பறை விளிக் குரல் நீள் வயல் நண்ணி இமிழும் ஊர! எம் இவண் நல்குதல் அரிது; நும் மனை மடந்தையொடு தலைப்பெய்தீமே. - ஜங் 86 வெண்மையான தலையையுடைய குருகு இனத்தின் பார்ப்புகளின் அழைக்கும் குரல் நீண்ட வயல்களை அடைந்து ஒலிக்கும் ஊரனே, இனி நீ எம்மை அருளுதல் கூடாது. ஆதலால் நின் மனையை அடைந்து நின் மனைவியுடன் கூடி இன்புறுக” என்று பரத்தை தலைவனிடம் கூறினாள்.