பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


87. என்னை வெறுத்துக் கூறுவானேன்

பகன்றைக் கண்ணிப் பல் ஆன் கோவலர்

கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்

யாணர் ஊர! நின் மனையோள்

யாரையும் புலக்கும்; எம்மை மற்று எவனோ? - ஐங் 87

பரத்தை “பகன்றை மலரால் கட்டப்பட்ட மாலையைச் சூடிய பல ஆக் கூட்டங்களையுடைய ஆயர்கள் கரும்பை, அடிக்கும் குறுந்தடியாகக் கொண்டு மாம்பழத்தை உதிர்க்கும் புது வருவாயை உடைய ஊரனே, நின் மனைவி யாவரையும் வெறுத்துச் சொல்லும் குணம் உடையவளாதலால் என்னைப் வெறுத்துக் கூறுதற்கு என்ன?” என்று தலைவியை இகழ்ந்து விரட்டிக் கூறினாள்.

88. அகத்தே விரும்புகிறோம்

வண் துறை நயவரும் வள மலர்ப் பொய்கைத் தண் துறை ஊரனை, எவ்வை எம் வயின் வருதல் வேண்டுதும் என்பது ஒல்லேம் போல் யாம் அது வேண்டுதுமே. - ஐங் 88 பரத்தை “வண்டுகள் வாழும் யாவரும் விரும்பும் வள மான பொய்கையின் குளிர்ந்த துறையினை உடைய ஊரனை யாம் எம்மிடமே வருவதை வேண்டுகின்றோம் என்று எம் தங்கை சொல்வதைப் புறத்தே விரும்பாதவர் போன்று காட்டி அகத்தே அதை விரும்பி ஒழுகுகின்றோம்” என்று சினந்து உரைத்தாள்.

89. பெண்டென்றே விரும்பினான்! அம்ம வாழி, பாண! எவ்வைக்கு எவன்? பெரிது அளிக்கும் என்ப - பழனத்து வண்டு தாது.ாதும் ஊரன் பெண்டு என விரும்பின்று, அவள் தன் பண்பே. - ஐங் 89 காதற் பரத்தை, “பாணனே, கேள், பழனங்களில் பூத்துள்ள பூக்களில் வண்டுகள் தேனை உண்ணும் ஊரன், எம் தங்கை யான தலை மகளைப் பெரிதும் அன்பு காட்டி