தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
45
ஒழுகுகின்றான் என்று அவளுக்குப் பாங்காயினார் சொல்லுவ தென்னை? அவளைத் தனக்குப் பெண்டெனக் கருதி அவன் விரும்பி ஒழுகுகின்றதற்குக் காரணம் அவள் தன் மனைவி என்ற பண்புடைமையே அன்றி வேறில்லை. இதை அவர்கள் அறியவில்லை போலும்” என்று தலைவியின் பங்காயினார் கேட்பக் கூறினாள்.
90. என்னே அறியாமை!
மகிழ்நன் மாண்குணம் வண்டு கொண்டனகொல்?
வண்டின் மாண்குணம் மகிழ்நன் கொண்டான்கொல்?
அன்னது ஆகலும் அறியாள்,
எம்மொடு புலக்கும், அவன் புதல்வன் தாயே. - ஐங் 90
காதற் பரத்தை தலைவனின் பங்காயினார் கேட்ப, மகிழ்நனின் சிறந்த குணங்களை வண்டுகள் அடைந்தனவோ, வண்டுகளின் சிறந்த குணங்களை அவன் அடைந்தானோ, செயல் ஒற்றுமை கொண்டு அறிய இயலவில்லை. ஆதலால் அச் செயல் அவனுக்கு இயல்பாகலும் அதனால் அவனை விலக்குதலும் ஆகாமையும் அறியாதவளாய், அவனுடைய மகனுக்குத் தாயான தலைவி, யாம் அவன் மனைக்குச் செல்லாதபடி தடுக்கின்றோம் என்று எம்முடன் புலக்கின்றாள். அவளது அறியாமை இருந்தவாறு என்னே!” என்று உரைத்தாள்.
எருமை_ஊரன்
91. தலைவி இளையவள்!
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து வெறி மலர்ப் பொய்கை, ஆம்பல் மயக்கும் கழனி ஊரன் மகள் இவள்; பழன வெதிரின் கொடிப் பிணையலளே. - ஐங் 91 தோழி, “வளைந்த கொம்புகளை உடைய எருமையின் கரிய பெரிய ஆண் மணமுற்ற பூக்கள் நிறைந்த பொய்கை யில் உள்ள ஆம்பலைச் சிதைக்கும் கழனிகளை உடைய ஊரனுக்கு மகள் இவள். பழனங்களில் உள்ள கரும்பின்