46
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
மலரால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலையை உடையவள் ஆவாள்” என்று தலைவியிடம் எதிர்ப்பட்டு கூறினாள்.
92. நானே மணக்க வருவேன்! கருங் கோட்டு எருமைச் செங்கட் புனிற்று ஆ காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும் நுந்தை, நும் ஊர் வருதும் - ஒண் தொடி மடந்தை நின்னை யாம் பெறினே. - ஐங் 92 தலைவன் தலைவியை நோக்கி, “பெரிய கொம்பையும் சிவந்த கண்ணையும் ஈன்ற அணிமையையும் உடையதாய எருமை தன் அன்புடைய கன்றுக்குச் சுரக்கும் முலை தந்து பாலூட்டும் நின் தந்தையின் ஊர்க்கு, ஒளி பொருந்திய வளை அணிந்த மடந்தையாகிய நின்னை யாம் கூடுமேல் யானே வருவேன்” எனக் கூறினான்.
93. வண்டு மொய்ப்பதன் காரணம்:
எருமை நல் ஏற்றினம் மேயல் அருந்தெனப்,
பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா,
செய்த வினைய மன்ற - பல் பொழில்
தாது உண் வெறுக்கைய ஆகி, இவள்
போதுஅவிழ் முச்சி ஊதும் வண்டே - ஐங் 93
தோழி, “அன்னையே! பல சோலைகளிலும் மலர்ந்துள்ள பூக்களின் தேனான உணவை மிகுதியாய் உண்டு. இவளது மலர்ந்த பூவணிந்த கூந்தலை மொய்த்து முரலும் வண்டின் கூட்டம், எருமையின் நல்ல ஏற்றினம் மேய்ந்ததால் பசுமை யான செங்கருங்காலியிலும் ஆம்பலிலும் பொருந்தாவாயின. அவை தேன் சேர்ப்பதாகிய செயல் முற்றி, இங்ஙனம் மொய்ப்பன வாயின” என்றாள் வேலிப்புறம் நின்ற தலைவன் கேட்ப,
94. தலைவி ஊர் உள்ள இடம்
மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை மகளிர் அன்ன துணையொடு வதியும் நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே -