பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

47


கழனித் தாமரை மலரும்,

கவின் பெறு சுடர் நுதல் தந்தை, ஊரே. - ஐங் 94

“அழகு பொருந்திய ஒளி வீசும் நெற்றியை உடைய வளுக்குத் தந்தையின் கழனியில் தாமரை மலரும் ஊர், வீரர் போன்ற பெருங் கொம்பையுடைய எருமை அவர் தம் மகளிர் போன்ற துணையான பெண்ணெருமையுடன் தங்கும் நிழல் பொருந்திய நீர்நிலைக்கு அருகில் உள்ள பழனத்தில் உள்ளதாகும்” என்று மணம் விரும்பிய தலைவன் கூறினாள்.’

95. அருநோய் செய்தனன் எமக்கு

கருங் கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ, நெடுங் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும் புனல் முற்று ஊரன், பகலும், படர் மலி அரு நோய் செய்தனன், எமக்கே. - ஜங் 95 தலைவி, “பெருங் கொம்பையுடைய எருமைகள் இரவில் தாம் கட்டப்பெற்றிருக்கும் கயிற்றை அறுத்துக்கொண்டு போய் நெடிய கதிர்களையுடைய நெல்லை நாள் உணவாய் உண்ணும் நீர் நிறைந்த வயல் சூழ்ந்த ஊரன், பகற்போதும் துன்பம் மிக்க நோயை எமக்குச் செய்து ஒழுகுகின்றான். ஆதலால் அவன் பொருட்டாக தூது வேண்டுவது ஏன்?” என்று கூறி துதினை மறுத்தாள்.

96. படுக்கையில் இன்துணையாயினாள்

அணி நடை எருமை ஆடிய அள்ளல்,

மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும்

கழனி ஊரன் மகள், இவள்;

பழன ஊரன் பாயல்இன் துணையே. - - ஐங் 96

“அழகிய நடையை உடைய எருமை உழக்கிய சேற்றில் நீலமணியின் நிறத்தையுடைய நெய்தலும் ஆம்பலும் தழைத்து வளர்கின்ற தன்மையுடைய ஊரனுக்கு மகளான இவள் பழனங்களையுடைய ஊரனான தலைவனுக்குப் படுக்கையில் இனிய துணைவியாய் ஆயினாள் என்னே!” என்று தூது வந்தோர் கூறிக் கொண்டனர்.