பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


97. இவள் தண்ணியள் பகன்றை வால்மலர் மிடைந்த கோட்டைக் கருந் தாள் எருமைக் கன்று வெரூஉம், பொய்கை, ஊரன் மகள் இவள்; பொய்கைப் பூவினும் நறுந் தண்ணியளே. - ஜங் 97 “பகன்றையின் வெண்மையான மலரைப் பொருந்திய கரிய தாள்களையுடைய எருமையின் கொம்பைப் பார்த்து அதன் கன்று அஞ்சும் பொய்கை ஊரனுக்கு மகளாகிய இவள் பொய்கையில் மலர்ந்த ஆம்பல் பூவை விடக் குளிர்ச்சி யுடையவள் ஆவாள்” என்று தலைவன் தனக்குள் உரைத்தான்.

98. இவனினும் கொடியரோ?

தண் புனலாடும் தடங் கோட்டு எருமை திண்பிணி அம்பியின் தோன்றும் ஊர, ஒண்தொடி மடமகள் இவளினும் நுந்தையும் ஞாயுங் கடியரோ நின்னே? - ஐங் 98 “குளிர்ந்த நீரில் ஆடும் பெரிய கொம்பை உடைய எருமை திண்மையாய்ப் பிணிக்கப்பட்ட தோணி போல் தோன்றும் ஊரனே, நின்னிடம் குற்றம் உள்ளதாயவிடத்து அதுபற்றி நின்னைக் கடியுங்கால் நின் தந்தையும் தாயும் ஒளியுடைய கொடியும் மடப்பமும் உடைய இவளினும் கடுமை உடையவர் ஆவாரோ கூறுக” என்று புறத்தொழுக்கம் நின்ற தலைவனிடம் தோழி உரைத்தாள்.

99. யான் உற்ற நோய்க்கு மருந்தானாள்

பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை கழனி எருமை, கதிரொடு டியக்கும் பூக்களுல் ஊரன் மகள்,இவள் நோய்க்கு மருந்தாகிய பணைத் தோளோளே! - ஜங் 99 “கழனிகளில் உள்ள பாகல் இலையில் முயிறு என்னும் எறும்புகள் கூடு அமைத்து முட்டையிட்டு நெருங்கி வாழும் அக் கூடுகளைக் கழனிகள் மேயும் எருமைகள் நெற்கதிர் களுடன் சேரச் சிதைக்கும் மலர்கள் நிறைந்த ஊரனுக்கு