அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
இயற்கை நெறிக்காலமாகிய சங்ககால ஆண் பெண் அன்புறவு நட்பில் மலர்ந்து தோழமையில் தோய்ந்து காதலில் இன்புற்று அறநெறி தவறா ஒழுக்க வாழ்வாகும். நானிலத்தின் பாகுபாட்டோடு வாழ்ந்த தமிழினத்தினர் களவில் தொடங்கி கற்புடை இல்லறவாழ்வில் இனிது வாழ்ந்தனர். வாழ்வோடும் நிலைத்தனை இயங்குதிணையோடும் இரண்டறக் கலந்து துய்த்தனர்.
தோழர் தங்கப்பா கூறுவதுபோல “பாலுறவு அதன் முழுமையான பயனையும் நுண்சுவையினையும் நல்குவது அன்பு நிலையில்தான். ஒருவரில் ஒருவர் உண்மை அன்பு பூண்ட ஆணும் பெண்ணும் தம்முள் கூடி வாழும் வாழ்வில்தான் பாலுறவு வாழ்வின் மலர்ச்சிக்குத் துணை புரிகிறது” என்கிறார். இதனின் மணிச்சுருக்கம் தான் ‘அன்பின் வழியது உயிர்நிலை என்பதும் - மலரினும் மெல்லியது காமம், சிலர் அதன் செவ்வி தலைபடுவார்’ என்பதுமாகும்.
பிற உயிர்களிடத்தும் ஆண்பெண் அன்புறவு உள்ளதெனினும் அஃது இயற்கையின் இயல்பூக்க உணர்ச்சியே தவிர, மனமலர்ச்சியின் பேரின்பம் நுகரவில்லை. அதனால் தான் தொல்காப்பியன்,
‘எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்’
என்றான். இந் நூற்பாவின் பொருள் உயர்திணை மாந்தர்க்கு மட்டுமின்றி பிற உயிரினங்கட்கும் பொருந்தும். அஃறிணைகள் மொழியைப் படைக்கத் தெரியாததால் தம்தம் இன்ப உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை. மாந்தன் உணர்ந்ததை உணர்த்தும் படைப்பாற்றல் உள்ளவன். ஆதலால் மொழி முதல் உளிவரை உள்ளது சிறக்கும் மனத்தறிவால் உணர்ச்சி வெளிப்பாட்டினை மொழியில் வெளிப் படுத்தியவையே இலக்கியங்கள். இதில் அகமும் புறமும் அடங்கும்.
தமிழர் வாழ்விலும் சங்க இலக்கியங்களிலும் ‘அன்பொடு புணர்ந்த ஐந்திணைதான் உண்டே தவிர தொல்காப்பியன் கூறும் கைக்கிளையும் பெருந்திணையும் தமிழர் வாழ்விலே இல்லை. இவ் இரண்டும் ஆரியர்களின் அழிம்பு நிலைகள். எனவே தான் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகுத்தனர். இப் பாகுபாடு அறிவியலுக்கும் சமூக மனவியலுக்கும் பொருத்தமானவை.
எந்தையர் வே.மு. தங்கவேலனார் தமிழ், தெலுங்கு சமற்கிருதம் ஆகிய மும் மொழிகளில் வல்லுநராய் இருந்தும் சங்க இலக்கியங்கள்