தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
51
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் தண்ணம் துறைவன் கொடுமை நம்முன் நாணிக் கரப்பாடும்மே. - கயமனார் குறு 9
“இயற்கையிலே மாந்தளிர் நிறத்தை உடைய தலைவி, இப்பொழுது உன் பிரிவினால் பொருந்தும் வாயை உடைய மாட்சிமைப்பட்ட செப்பினுள் தனித்து இட்டு வைக்கப் பட்ட சூடப்படாத மலர்களைப் போல் உடல் மெலிந்து காட்சியளிக்கிறாள். பசுமையுடைய இலைகளுக்கு மேலே உயர்ந்து தோன்றுகின்ற திரண்ட காம்பையுடைய நெய்தல் நறும்பூ கூட்டமாகிய மீன்களையுடைய கரிய கழியிலே நீர்ப் பெருக்கு மிகுந்தோறும், குளத்தில் மூழ்கி நீராட வரும் மகளிரின் கண்ணை ஒத்திருக்கும், குளிர்ச்சியுடைய நீர்த் துறைக்குரிய தலைவனது பரத்தமைக் கொடுமையைத் தோழி யாகிய எம் முன்னே சொல்லுதற்கும் நாணமுற்று, மறைத்து உரையாடுகிறாள். ஆதலின், அவள் கற்புக்கடம் பூண்ட வளாகக் காட்சியளிக்கிறாள்.” என்று தோழி தலைவனிடம் துTதுரைத்தாள்.
103. யாராளோ நமக்கு?
எவ்வி இழந்த வறுமையர் பாணர் பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று இண்ைமதி வாழியர் - நேஞ்சே - மனை மரத்து எல்லுறும் மெளவல் நாறும் பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே. - பரணர் குறு 19
“நெஞ்சே வீட்டுமனையிலே உள்ள மரத்தின்மீது படர்ந்த ஒளியையுடைய முல்லை மலர்கள் மணம் வீசுதற் கிடமாகிய பலவாகிய கரிய கூந்தலையுடைய இவள். இனி நமக்கு இத்தகைய உறவினை உடையவளோ? ஏதிலர் போலும். கொடையளித்துப் புரக்கும் எ ப்வி என்பவனை இழந்த, வறுமையையுடைய யாழ்ப்பாணரது பொற்பூ இல்லாத தலையானது பொலிவிழந்திருத்தல் போல, பொலிவிழந்து வருந்துவாயாக!” என்று உணர்ப்பு வாரா ஊடற்கண் தலைவன் சொல்லினான்.