பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


104. நானும் ஓர் ஆடுகள மகளே!

மள்ளர் குழிஇய விழவினானும், மகளிர் தழிஇய துணங்கையானும், யாண்டும் காணேன், மாண் தக்கோனை, யானும் ஒர் ஆடுகள மகளே;என் கைக் கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த பீடு கெழு குரிசிலும் ஒர் ஆடுகள மகனே.

- - ஆதிமந்தி குறு 31 “மாண்பு பொருந்திய தகுதி படைத்தவனான தலை வனை, வீரர்கள் கூடியுள்ள சேரி விழாவின்கண்ணும், பொது மகளிர் தம்முள் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்தன் கண்ணும் இவையில்லாத பிற இடங்களிலும் கண்டேனில்லை. யானும் ஆடுகின்ற களத்திற்குரிய ஒரு பெண்ணே, என் கையிலுள்ள சங்கை அறுத்துச் செய்த விளங்குகின்ற வளை யல்கள் நெகிழும் படியாகச் செய்த பெருமை பொருந்திய தலைவனும் ஆடுகின்ற களத்திலுள்ள ஒருவனே.”

105. இவன் எத்தகைய சிறப்புடையவன்! அன்னாய் இவன்ஒர் இள மாணாக்கன்; தன் ஊர் மன்றத்து என்னன்கொல்லோ? இரந்துரண் நிரம்பா மேனியொடு விருந்தின் ஊரும் பெருஞ் செம்மலனே.

- படுமரத்து மோசிகீரன் குறு 33 “தோழியே! இப் பாணன் ஒர் இளைய மாணாக்கன் ஆவான். தன்னுடைய ஊரிலுள்ள பொதுமன்றத்தில் எத் தகையவனோ? இரந்து பெறும் உணவினால் முழு வளர்ச்சி யடையாத உடம்பொடு உள்ள இவன் புதிதாக விருந்து பெறும் தலைமை உடையவன் ஆவான்.” என்று பாணன் கேட்கும்படி தலைவி தோழியிடம் கூறினாள்.

106. மங்கல இசையில் இன்புறுவராக!

ஒறுப்ப ஒவலர், மறுப்பத் தேறலர், தமியர் உறங்கும் கெளவை இன்றாய்,