பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 55

இனியது கேட்டு இன்புறுக, இவ் ஊரே - முனாஅது, யானையங்குருகின் கானல்அம் பெருந்தோடு அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெருஉம் குட்டுவன் மாந்தை அன்ன எம் குழை விளங்கு ஆய்துதற் கிழவனும் அவனே.

- கொல்லிக் கண்ணன் குறு 34 “கடற்கரையிலுள்ள வண்டாழங்குருகின் பெரிய கூட்ட மானது, பகைவரைக் கொன்று வெற்றி கொண்ட வீரர்களின் முழக்கத்தினைக் கேட்டு அஞ்சுவதற்கு இடமாகிய குட்டு வனுடைய மாரத்தை என்னும் நகரைப் போன்ற நும்முடைய கூந்தல் விளங்குகின்ற அழகிய நெற்றிக்கு உரிமையுடைய அத் தலைவனே வரைவோடு வந்தவனும் ஆவான். ஆதலின் தமர் தடை செய்ததனால் வந்த வருந்துதல் இருந்தது நீங்கப் பெறாளாய், தோழியர் வருந்துதல் தகாது என்று தேற்றியும் தேறாதவளாய்த் தலைவரைப் பிரிந்து தனிமை யில் உறங்குகின்ற வருத்தம் இனி இல்லாதவளாகி இவ் ஊரில் உள்ளோர் இனிய மணச் செய்தியைக் கேட்டு இன்புறும் படியாக அவன் வரைந்து கொள்வான்.” என்றாள் தோழி தலைவியிடம்.

107. நாணம் அற்றன கண்கள் நாண் இல மன்ற எம் கண்ணே - நாள் நேர்பு, சினைப் பசும் பாம்பின் சூல் முதிர்ப்பன்ன. கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ நுண் உறை அழிதுளி தலைஇய தண் வரல்வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே.

h - கழார்க் கீரன் எயிற்றி குறு 35 “தோழியே! தலைவர் பிரிந்த நாளில் இதற்கு உடன்பட்டு இருந்த என் கண்கள், இப்பொழுது கருப்பத்தை உடைய பச்சைப் பாம்பினது கருவின் முதிர்ச்சியைப் ப்ோன்ற திரண்ட கரும்பினது குவிந்த அரும்பு மலரும்படி, துண்ணிய மழைத் துளியோடு கலந்த வாடைக் காற்று வீசும் கூதிர் காலத்தும் பிரிந்துறையும் தலைவருக்காக அழும் என் கண்கள்