54
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
உறுதியாக நாணம் இல்லாதவை ஆயின.” என்று தலைவி தோழியிடம் வருந்திக் கூறினாள்.
108. உயர்குடியில் பிறத்தலும் கொடிதே!
காலை எழுந்து, கடுந்தேர் பண்ணி, வால் இழை மகளிர்த் தழிஇய சென்ற மல்லல் ஊரன், எல்லினன் பெரிது என, மறுவரும் சிறுவன் தாயே, தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே.
- ஆலங்குடி வங்கனார் குறு 45 “காலையில், விரைந்து செல்லும் தேரை அலங்கரித்து துய அணிகலன்களை அணிந்த பரத்தையரைத் தழுவி இன்புறும் பொருட்டுச் சென்ற, வளப்பம் பொருந்திய ஊரையுடைய தலைவன் பெரிதும் விளக்கத்தையிடையவன் ஆயினன் என்று எண்ணி மகப்பெற்ற தலைவி அவனை ஏற்றுக் கொள்வாள். ஆயினும் மனத்தினுள் வருந்துவாள். அவள் வருந்துதற்குரிய செயலைத் தலைவன் செய்யினும் அதனை மன்னித்த மறந்து வாயில் நேர்தற்குரிய பெண் பிறப்பாகப் பிறத்தல் துன்புறுவதற்கே ஆகும்.” என்று செவிலித்தாய் வருந்திக் கூறினாள்.
109. மாலைத் துயரம் அவர் சென்ற நாட்டில் இல்லையோ? ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து எருவின் நுண் தாது குடைவன ஆடி, இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும் புன்கண் மாலையும் புலம்பும், இன்றுகொல் - தோழி! - அவர் சென்ற நாட்டே
- மாமிலாடனன் குறு 46 “தோழியே! ஆம்பல் மலரின் வாடலை ஒத்த குவிந்த சிறகுகளையுடைய வீட்டின்கண் தங்கும் குருவிகள், முற்றத்